ரயில் டிக்கெட் முன்பதிவில் வருகிறது மேஜர் மாற்றம்.. 40 ஆண்டு கால நடைமுறைக்கு முற்றுப்புள்ளி..!!

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் ரயில் சேவைகளை பயன்படுத்துகிறார்கள் குறைந்த டிக்கெட் கட்டணத்தில் சௌகரியமான பயணம் செய்ய முடியும் என்பதால் தான் பொதுமக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொது போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இருக்கிறது.

இந்திய ரயில் போக்குவரத்து உலகிலேயே மிகப்பெரிய ஒரு போக்குவரத்து நெட்வொர்க்காக பார்க்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் 40 ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கக்கூடிய PRS - Passenger Reservation System எனப்படும் பயணிகள் முன்பதிவு அமைப்பினை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவில் வருகிறது மேஜர் மாற்றம்.. 40 ஆண்டு கால நடைமுறைக்கு முற்றுப்புள்ளி..!!

இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவில் முதுகெலும்பாக இந்த யணிகள் முன்பதிவு அமைப்பு இருக்கிறது. 1986 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரக்கூடிய இந்த அமைப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெரிய அளவில் மாற்றம் காண இருக்கிறது. ரயில்வே துறை அமைச்சர் இது தொடர்பாக டெல்லி ரயில்வே பவனில் அதிகாரிகளோடு முக்கியமான ஒரு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தொழில்நுட்ப ரீதியிலாக பயணிகள் முன்பதிவு முறையில் பெரிய மாற்றம் கொண்டு வருவது என முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

1986 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்த ரயில்வே டிக்கெட் முறை தான் இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. இந்த 40 ஆண்டுகளில் இணையதள தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது ,மொபைல் போன்கள் ,டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆகியவை பெருகிவிட்டன. எனவே இதற்கு ஏற்ற வகையில் சிறு சிறு மாற்றங்களை ரயில்வே கொண்டு வந்திருந்தாலும் முழுமையாக தொழில்நுட்ப ரீதியில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறது.

Also Read

இந்தியாவில் 2002 ஆம் ஆண்டிலிருந்து இன்டர்நெட் அடிப்படையிலான டிக்கெட் முன்பதிவு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது நாட்டில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களில் 88 சதவீதம் ஆன்லைன் தளங்கள் வழியாக தான் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் ரயில்வே கவுண்டர்களுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்வதே கிடையாது. அண்மையில் கூட இந்திய ரயில்வே சார்பாக Rail one செயலி அறிமுகம் செய்யப்பட்டது. 3.5 கோடி பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரயில்வே துறை சார்ந்த அனைத்து தேவைகளுக்குமான ஒரே செயலியாக ரயில் ஒன் செயலி திகழ்கிறது. டிக்கெட் முன்பதிவு மட்டும் இல்லாமல் டிக்கெட் ரத்து செய்வது , ரயில் லைவ் ஸ்டேடஸ் தகவல்களை பெறுவது, புகார் தருவது , உணவு ஆர்டர் செய்வதென அனைத்துமே இந்த ஒரு செயலிலேயே செய்து கொள்ள முடியும். இதனை ஏஐ அடிப்படையில் மேம்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

Recommended For You

மக்கள் எளிமையாகவும் அதே வேளையில் ரயில் டிக்கெட் முன்பதிவு அமைப்புக்கு தற்போது செய்யும் செலவுகளை குறைத்து ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையிலும் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றத்தை கொண்டு வரும் வகையிலும் இந்திய ரயில்வே ஆகஸ்ட் மாதத்தில் புதிய நடைமுறைகளை கொண்டு வர ஆயத்தமாகி வருகிறது. இதற்கான ஆய்வுகளும் பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் மாற்றம் கொண்டு திட்டமிட்டிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு இன்னும் அப்கிரேட் செய்யப்பட உள்ளது. டிக்கெட் பதிவின் போதே அது உறுதியாவதற்கான வாய்ப்பினை 100% கணிப்பது என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+