இந்திய ரியல் எஸ்டேட் துறை, கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வந்த நிலையில், 2025இல் மந்தநிலையை சந்தித்துள்ளது. தேசிய அளவில் வீடு விற்பனை 2024ஐ விட சுமார் 12% குறைந்துள்ளது என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற ஐடி துறை வர்த்தகம் பிரதானமாக இருக்கும் நகரங்களில் இந்த சரிவு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. வீடு வாங்குபவர்கள் பெரிய சொத்து முடிவுகளை தாமதப்படுத்துவதால், வீடு விற்பனை மெதுவாக நடக்கின்றன. இது ஐடி துறை ஊழியர்களின் வருமான நிலைத்தன்மை, வேலைவாய்ப்புக்கு உத்தரவு இல்லைமை போன்ற பிரச்சனையால் ஏற்பட்டுள்ளது.
ஐடி துறை அச்சம்:
பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களின் ரியல் எஸ்டேட் துறை ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை நம்பியுள்ளன. இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு வருமானம் சம்பளம் மட்டுமின்றி, போனஸ், ஈஎஸ்ஓபி (ஊழியர் பங்கு விருப்பங்கள்) போன்றவற்றை சார்ந்துள்ளது. சமீபகாலமாக ஐடி நிறுவனங்களில் பணிநீக்கங்கள் மற்றும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் எதிர்கால வருமானம் குறித்த சந்தேகத்தை அதிகரித்துள்ளன. "வேலை பாதுகாப்பாக இருக்குமா?" என்ற கேள்வி பலரை வீடு வாங்குவதை தள்ளிப்போட வைக்கிறது. இதனால், பலர் பட்ஜெட்டை குறைத்து சிறிய வீடுகளை தேடுகின்றனர் அல்லது முழுமையாக காத்திருக்கின்றனர்.

பெங்களூரு 5%, ஹைதராபாத் 14% குறைவு
பெங்களூருவில் 2025இல் வீடு விற்பனை முந்தைய ஆண்டை விட சுமார் 5% குறைந்துள்ளது. ஒயிட்ஃபீல்ட், அவுட்டர் ரிங் ரோடு போன்ற ஐடி வழித்தடங்களில் இந்த மந்தநிலை அதிகம்.
இதேபோல் ஹைதராபாத்தில் ஜனவரி 2025 பதிவுகள் 14% குறைந்துள்ளன. காச்சிபௌலி, ஹை-டெக் சிட்டி போன்ற பகுதிகளில் வாங்குபவர்கள் பல திட்டங்களை சரிபார்த்து, நீண்ட நேரம் எடுத்துக்கொள்கின்றனர். முன்பு சில நாட்களில் விற்ற வீடுகள் இப்போது நீண்ட காலம் சந்தையில் இருக்கின்றன என்று டெவலப்பர்கள் கூறுகின்றனர்.
விலை உயர்வு மற்றும் கடன் சுமை:
முக்கிய பகுதிகளில் விலை உயர்வு அதிகமாக உள்ளதால் சம்பளம் வாங்கும் வாங்குபவர்களின் கடன் தகுதி பாதிக்கப்படுகிறது. நடுத்தர மற்றும் உயர் நடுத்தர குடும்பங்கள் சேமிப்பு, கடன் மற்றும் முதலீடுகளை நம்பியுள்ளன. வேலை இழப்பு ஈஎம்ஐ திருப்பிச் செலுத்துவதில் இடையூறு ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ள நிலையில் ரிஸ்க் எடுத்து அதிக தொகைக்கு வீடு வாங்குவதை மக்கள் விரும்பவில்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.
ரெடி-டு-மூவ்-இன் வீடுகளுக்கு அதிக விருப்பம்:
மக்கள் மத்தியில் தற்போது கட்டுமானத்தில் இருக்கும் சொத்துகளை விட ரெடி-டு-மூவ்-இன் வீடுகளுக்கு அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். கட்டுமான தாமதங்கள், திட்ட அபாயங்கள் மற்றும் வாடகை + ஈஎம்ஐ இரட்டை செலவை தவிர்க்க மக்களுக்கு இது உதவுகிறது. ரெடி டூ மூவ் இன் வீடுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும் வாங்க மக்கள் தாயாராக உள்ளனர். ஆனால் சந்தையில் இத்தகைய வீடுகள் கிடைப்பது தற்போது அரிதாகியுள்ளது.

கட்டுமான நிறுவனங்களின் உத்தி மாற்றம்:
மந்தநிலையை சரி செய்ய திட்டமிடும் டெவலப்பர்கள், புதிய கட்டிடத்தின் அறிமுக அட்டவணையை மறுபரிசீலனை செய்து, விரைவாக டெலிவரி செய்யக்கூடிய கட்டங்களில் கவனம் செலுத்துகின்றனர். குறைவான விலை கொண்ட வீடுகள், நெகிழ்வான கட்டண திட்டங்கள், சிறிய வீடுகள் மீண்டும் சந்தையில் அதிகரிக்க துவங்கியுள்ளது. ப்ரீமியம் வீடுகளை நம்பியிருந்த ரியல் எஸ்டேட் துறை தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளது.
தற்காலிக பாதிப்பா? அல்லது நீண்டகால பாதிப்பா?
நிபுணர்கள் இந்த மந்தநிலை தற்காலிகமானது என்று கருதுகின்றனர். ஐடி துறையில் ஆட்சேர்ப்பு மேம்பட்டு, பங்குச் சந்தை நிலையானால் நம்பிக்கை திரும்பும். தற்போது வீடு வாங்குபவர்கள் நிதி ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். வேலை ஸ்திரத்தன்மை, அவசர சேமிப்பு, எதிர்கால வருமான வளர்ச்சியை ஆராய வேண்டும். வங்கிகள் அதிக கடன் அளித்தாலும், ஈஎம்ஐ உங்கள் வருமானத்திற்கு ஏதுவான அளவில் இருக்க வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications