இந்தியாவின் பெருநகரங்களில் வீடு வாங்குவது என்பது நாளுக்கு நாள் மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. சாமானிய மக்கள் அனைவரும் பங்குச்சந்தை, வங்கி டெபாசிட் என முதலீடு செய்யும் வேளையில், NRI-களும், பெரும் முதலீட்டாளர்களுக்கும் ஆடம்பர வீடுகளை வாங்கி குவித்து வருகின்றனர். இதனால் இந்திய பெரு நகரங்களின் ரியல் எஸ்டேட் சந்தை ஆடம்பர சந்தையாக மாறியுள்ளது. இதனால் சாமானிய மக்களால் சொந்த வீடு வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதைவிட முக்கியமான விஷயம் தற்போது வெளியாகியுள்ளது, இந்தியாவில் டாப் 5 சதவீத பணக்கார குடும்பங்கள் நாட்டின் பெரு நகரங்களில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் எத்தனை வருட சேமிப்பு தேவைப்படும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆய்வில் வெளியான தகவல் பலரையும் நடுங்க வைத்துள்ளது மட்டும் அல்லாமல்ல ரியல் எஸ்டேட் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையும் காட்டியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில், டாப் 5% பணக்காரர்களின் சாராசரி வருமானத்தின் அடிப்படையில் ஒருவர் வீடு வாங்க வேண்டும் என்றால் ஒருவர் 109 ஆண்டுகள் சேமிப்பு தேவைப்படுகிறது. இதுவே ஹரியானாவின் குர்கானில் 63 ஆண்டுகளும், ஒடிசாவின் புவனேஸ்வரில் 50 ஆண்டுகளும் தேவை. ஆனால், சண்டிகரில் 15 ஆண்டுகள் மட்டுமே போதுமானது என இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. அப்போ சென்னையில்..?
மும்பை செம காஸ்ட்லி: மும்பையில், டாப் 5% பணக்கார குடும்பங்களின் மாதாந்திர தனிநபர் செலவு (MPCE) ரூ.22,352 ஆக உள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு கணக்கிட்டால் 89,408 ரூபாயாக உள்ளது, இது ஆண்டுக்கு சுமார் ரூ.10.7 லட்சமாக உள்ளது. இந்த செலவிடும் தொகையில் 30.2% விகிதத்தை சேமித்து வீடு வாங்குகிறார்கள் என கணக்கிட்டால், இந்த குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.3.2 லட்சம் சேமிக்கின்றன.
NHB டேட்டா: தேசிய வீட்டு வங்கி (NHB) தரவுகளின்படி, மார்ச் 2025-ல் மும்பையில் 645 முதல் 1,184 சதுர அடி கொண்ட வீட்டில், ஒரு சதுர அடிக்கு ரூ.29,911 செலவாகிறது. இதன்படி, 1,184 சதுர அடி வீடு ரூ.3.5 கோடிக்கு மேல் செலவாகும், இதற்கு 109 ஆண்டுகள் சேமிப்பு தேவை. இது தான் கணக்கீட்டு முறை, இப்படி பார்த்தால் சென்னை மக்கள் சுமார் 37 வருடம் காத்திருக்க வேண்டும்.
தேசிய வீட்டு வங்கியின் தரவுகளின்படி, 21 மாநில தலைநகரங்களில், 10 இடங்களில் வீடு வாங்குவதற்கு 30 ஆண்டுகளுக்கு மேல் சேமிப்பு தேவைப்படுகிறது என புள்ளி வபரத்தை அடுக்குகிறது.

மலிவான விலையில் வீடு: இந்த ஆய்வின் படி சண்டிகர் தான், இந்தியாவின் மிக மலிவான தலைநகரமாக விளங்குகிறது, அங்கு டாப் 5 சதவீத மக்கள் 15 ஆண்டுகள் சேமித்தால் போதும் வீடு வாங்கிவிடலாம். இதை தொடர்ந்து ஜெய்ப்பூரிலும் 16 ஆண்டுகளுக்கும் குறைவான சேமிப்பு இருந்தால் போதும்.
மக்கள் குமுறல்: இந்த வீட்டு விலை நெருக்கடி, இந்தியாவின் நகர்ப்புற குடும்பங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. டாப் 5% வருமானம் பெறுவோர் கூட மும்பை போன்ற நகரங்களில் வீடு வாங்க முடியாமல் தவிக்கின்றனர் எனில் மற்ற பிரிவு மக்களின் நிலைமை யோசித்து கூட பார்க்க முடியவில்லை.
இது இந்தியாவில் நிலவும், குறிப்பாக பெருநகரங்களில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்துகிறது. வீட்டு விலைகளின் உயர்வு, வங்கி கடன்கள் மற்றும் நிதி திட்டமிடலுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
முதலீட்டாளர்களுக்கு அட்வைஸ்: வீடு வாங்குவதற்கு தேவையான நீண்ட சேமிப்பு காலம், முதலீட்டாளர்களுக்கு ஒழுக்கமான நிதி திட்டமிடலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மும்பை, குர்கான், மற்றும் புவனேஸ்வர் போன்ற நகரங்களில், வீட்டு கடன்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்வது, நீண்டகால இலக்குகளை அடைய உதவலாம்.
இதேபோல் சண்டிகர் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற மலிவு நகரங்களில் முதலீடு செய்வது, ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு மாற்று வழியாக இருக்கலாம். இல்லையெனில் 2ஆம் நிலை நகரங்களிலும் நீங்கள் முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications