இந்திய ரியல் எஸ்டேட் சந்தை எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் மாறி வருகிறது, சமீபத்திய ஆண்டுகளில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளதால், சந்தையின் டைனாமிக்ஸ் மொத்தமாக மாறியுள்ளது.
இந்தியாவில் அதிக செல்வம் கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், பிரீமியம் வாழ்க்கையை தேர்வு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் ஏற்பட்ட மாற்றம் தான் இது. இதனால் 2024 ஆம் ஆண்டில் ஆடம்பர குடியிருப்பு திட்டங்களின் அறிமுகம் அதிகரித்து, இடங்களை நோக்கிய விருப்பத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதும் இதற்குக் காரணம்.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான 12 மாதங்களையும், இந்திய வரலாற்றில் அதிகப்படியான ஆடம்பர வீடுகளின் விற்பனை கொரோனா காலமான 2021 உடன் ஒப்பிடுகையில், அதிர்ச்சியூட்டும் வகையில் 648% இந்த 12 மாதத்தில் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்டவீடுகளின் மொத்த மதிப்பு ரூ. 1.3 லட்சம் கோடியை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டை காட்டிலும் 633% அதிகமாகும்.
இந்த ஆடம்பர வீடுகள் விற்பனையில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தியாவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக விலையுள்ள அடுக்குமாடி வீடுகளுக்கு மிகப்பெரிய அளவிலான டிமாண்ட் உள்ளது என்பது தான். கிட்டத்தட்ட மிளாகாய் பஜ்ஜி கணக்காக இந்த ஆடம்பர வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சந்தை நிலவரம் கூறுகிறது.
நைட் பிராங்க் வெளியிட்ட 2023 ஆம் ஆண்டு வெல்த் அறிக்கையின் படி, இந்தியாவில் அதிக செல்வம் கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கையில் 2023 ஆம் ஆண்டில் 13,263 பேராக இருந்த இந்த எண்ணிக்கை 2028 ஆம் ஆண்டுக்குள் 19,908 ஆக 50.1% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில இந்தியாவில் அதிக செல்வம் கொண்ட தனிநபர்களுக்கு பிரீமியம் கவர்ச்சியான குடியிருப்பு சொத்துக்களை முக்கிய முதலீடாக பார்ப்பது மட்டும் அல்லாமல் தங்கள் செல்வத்தில் சுமார் 32% தொகையை ஆடம்பர குடியிருப்பு ரியல் எஸ்டேட்டிற்கு ஒதுக்குகிறார்கள். இதுதான் ஆடம்பர குடியிருப்பு வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதேபோல் பெரும் பணக்காரர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பிராண்டட் வீடுகள், அதாவது இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் திட்டங்களை தேடிப்படித்து வாங்குவதாகவும் கள நிலவரம் கூறுகிறது.
உதாரணமாக ஓப்ராய், அர்மானி, டிரம்ப் மற்றும் நான்கு சீசன்ஸ் போன்ற புகழ்பெற்ற சர்வதேச பிராண்டுகளுடன் இணைந்து உருவாக்கப்படும் ரியல் எஸ்டேட் சொத்துக்களுக்கு சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. இத்தகைய திட்டங்கள் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் ஆனால் சில மணிநேரத்தில் விற்கப்படுவது வாடிக்கையாகியுள்ளது.


Click it and Unblock the Notifications