காலம் காலமாக எவ்விதமான சந்தை தடுமாற்றத்தையும் கடந்து ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்பதைப் பல முறை நிரூபித்த நிலையில், கொரோனா தொற்றுப் பாதிப்புகளுக்கு பின்பு இந்தியா முழுவதும் பிரம்மாண்ட வளர்ச்சியை அடைந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிலும் சிறப்பான வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
தற்போதையைச் சந்தை நிலவரங்கள் படி 2023 ஆம் நிதியாண்டில் இந்திய ரியல் எஸ்டேட் துறை சுமார் 13,00,000 கோடி ரூபாயாக உயரும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு 3 விஷயங்களை முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஆர்பிஐ
ஆர்பிஐ வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளதால் கடந்த 2 வருடத்தில் இருந்த ரியல் எஸ்டேட் மேஜிக் 2023 ஆம் ஆண்டில் இருக்காது எனக் கருத்து நிலவிய வேளையில் இந்த ரிப்போர்ட் பெரும் நம்பிக்கை கொடுத்துள்ளது.
3 முக்கியக் காரணங்கள்
2023ஆம் ஆண்டில் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை 3 முக்கியக் காரணங்கள் மூலம் சிறப்பாக வளர்ச்சி அடையும், அவை அதிகரித்து வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் மக்களின் வருமானம், அதிகரித்து வரும் நகரமயமாக்கல். இதேபோல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யப் பல காரணங்கள் உள்ளது.
முதலீட்டாளர்கள்
இதில் முதலும் முக்கியமாகப் பங்குச்சந்தை போல் ரியல் எஸ்டேட் முதலீடுகள் அதிகப்படியான தடுமாற்றத்தை அடைவது இல்லை. 2வது நிலையான வருமானத்தை அளிக்கக் கூடியது ரியல் எஸ்டேட் முதலீடுகள். 3வது நீண்ட கால அடிப்படையில் கட்டாயம் பெரும் லாபத்தை அளிக்கும் இதன் மூலம் மூலதனத்தில் லாபம் கிடைக்கும் என்பதை உறுதி செய்யப்படுகிறது.
சிறு முதலீட்டாளர்கள்
கடைசியாக ரியல் எஸ்டேட் சிறு முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான வரிச் சேமிப்பு அளிக்கும் அதேநேரத்தில் சொத்துக்களை உருவாக்க மிகப்பெரிய வாய்ப்பை அளிக்கும்.
பொருளாதார வளர்ச்சி
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் அதிகப்படியான முதலீட்டை இந்தியாவில் செய்ய உள்ளதால் ஹவுசிங் ரியல் எஸ்டேட் முதல் கமர்சியல் ரியல் எஸ்டேட் வரையில் வேகமாக வளர்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
ரெசிஷன்
இதே வேளையில் 2023 ஆம் ஆண்டில் பிரிட்டன், ஐரோப்பா ஆகியவை ரெசிஷனில் மாட்டிக்கொள்ளும் எனக் கணிக்கப்படுவதால் சர்வதேச முதலீட்டாளர்கள் கட்டாயம் வளர்ச்சி பாதையில் இருக்கும் சந்தையில் முதலீட்டை திருப்புவார்கள், அப்படிப் பார்க்கும் போது ஆசியாவிலேயே அதிக வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
முதலீடுகள்
இதேபோல் தற்போது ஸ்டார்ட்அப் மற்றும் பிற டெக் நிறுவனங்கள் மீதான முதலீடுகள் தடுமாறியுள்ள நிலையில் பெரும் தொகை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதன் வாயிலாகவே 2023 ஆம் ஆண்டில் இந்திய ரியல் எஸ்டேட் துறை அனைத்து மட்டத்திலும் வளர்ச்சி அடைந்து சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயரும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications