இந்தியாவின் அதிரடி முடிவு.. சவுதியிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியினை குறைக்க திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா சர்வதேச அளவில் அதிகளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று. குறிப்பாக சவுதியிடம் இருந்து கணிசமான எண்ணெயினை இறக்குமதி செய்து வருகின்றது.

 

இதற்கிடையில் வரும் மே மாதம் முதல் சவுதியிடம் இருந்து ,எண்ணெய் இறக்குமதியை குறைக்க திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக சராசரியாக இறக்குமதி செய்யும் அளவை விட 36% குறைவாக இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிள்ளன.

இந்தியா – சவுதி வர்த்தக உறவு

இந்தியா – சவுதி வர்த்தக உறவு

ஒபெக் நாடுகள் மே மாதம் முதல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், சவுதியும் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளாரும், நுகர்வோருமான இந்தியாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையிலான உறவும் பெரியளவில் இருந்து வந்தது.

ஆர்டர் குறைப்பு

ஆர்டர் குறைப்பு

எனினும் தற்போது கொரோனாவின் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது தான் அதிலிருந்து மீள்ச்சி காண ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் சவுதி அரேபியாவும், மற்ற எண்ணெய் விலையை அதிகரிக்க முயற்சிப்பதாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த ஆண்டில் மே மாதத்தில் 10.8 மில்லியன் பேரல் ஆயில் சவுதியிடம் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் ஆர்டர் கொடுத்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டில் 9.5 மில்லியன் பேரல் ஆர்டர் மட்டுமே கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சராசரியாக எவ்வளவு?
 

சராசரியாக எவ்வளவு?

குறிப்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், மங்களூர் ரீபைனரி அன்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனங்கள் மாதத்திற்கு 14.8 மில்லியன் பேரல்கள் எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.

எண்ணெய் விலையை குறைக்க முடியாது

எண்ணெய் விலையை குறைக்க முடியாது

இப்படியொரு நிலையில் இந்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சவுதியின் எண்ணெய் அமைச்சர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல் சவுத் ஆகியோருக்கு இடையில், கடந்த சனிகிழமையன்று தொலைபேசி வழியாக உரையாடல் நடந்தது. அதில் கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு பதிலளித்த அமைச்சர், கடந்த ஆண்டு எண்ணெய் விலை வீழ்ச்சியின் போது இந்தியா வாங்கிய எண்ணெய் இருப்பினை பயன்படுத்துமாறும் கூறியதாக பிபிசி செய்திகள் கூறுகின்றன.

அதிக இறக்குமதிக்கு மறுப்பு

அதிக இறக்குமதிக்கு மறுப்பு

ஆக இந்த உரையாடலுக்கு பிறகே, இந்தியா இப்படியொரு அதிரடியான முடிவினை எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு இந்தியா சவுதியிடம் எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க கேட்டது. ஆனால் அந்த சமயத்தில் சவுதி ஆசியாவின் சில சுத்திகரிப்பாளர்களுக்கு சப்ளையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியது. எனினும் இந்தியாவுக்கு குறைக்க மாட்டோம். ஆனால் அதிகப்படியான எண்ணெய் அனுப்ப முடியாது என நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் திட்டம் என்ன?

இந்தியாவின் திட்டம் என்ன?

இந்தியாவில் ஏற்கனவே விலை உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், இன்னும் எரிபொருட்கள் விலை அதிகரிக்குமோ என்ற நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான், இந்தியா சவுதியிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்து, அமெரிக்காவிடம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தது. இந்தியாவில் குறிப்பாக கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் அச்சம் காரணமாக, மக்கள் தனியார் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.

வலுவான தேவை

வலுவான தேவை

இதனால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வலுவான தேவை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயில் சுத்திகரிப்பாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மே மாதத்தில் இருந்து சவுதியிடம் எண்ணெய் இறக்குமதியை குறைக்க அல்லது நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதேசமயம் அமெரிக்காவிடம் இருந்து அதிகம் வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறியிருந்தது. இதற்கிடையில் தான் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் இப்படி ஒரு அதிரடி முடிவினை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian refiners deepen cuts to Saudi oil purchases in May 2021

Crude oil updates.. Indian refiners deepen cuts to Saudi oil purchases in May 2021
Story first published: Wednesday, April 7, 2021, 14:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X