இந்திய-சீனா இடையே சத்தமேயில்லாமல் நடக்கும் தரமான சம்பவத்த பாருங்க.. ஆனால் கெட்ட செய்தியும் உண்டு!

டெல்லி: கொரோனா வைரஸினால் மொத்த உலகமும் சின்னாபின்னமாகிக் கொண்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டும் அன்றாட தேவைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.

அதுமட்டும் அல்ல, பொருளாதாரம், தொழில் துறை ஏற்றுமதி இறக்குமதி என அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.

இப்படி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், இன்னும் என்னவெல்லாம் காண வேண்டுமோ தெரியவில்லை.

சில நாடுகளுக்கு ஏற்றுமதி தொடக்கம்

சில நாடுகளுக்கு ஏற்றுமதி தொடக்கம்

இந்திய சுத்திகரிப்பாளர்கள் டீசல் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் அதிலும் பெரும்பகுதி தற்போதும் சீனாவுக்கு தான் செல்ல ஆரம்பித்துள்ளதாம். ஏனெனில் அங்கு தற்போது பொருளாதாரம் மீட்டுப் பாதை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது. எரிபொருள் விற்பனையானது பாதிக்கும் மேலாக குறைந்துவிட்டதால், உற்பத்தியும் குறைந்திருந்தது.

டீசல் தேவை சரிவு

டீசல் தேவை சரிவு

மேலும் ஒர் அறிக்கையின் படி, ஏப்ரல் முதல் பாதியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது டீசல் தேவை 61% குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் மறுபுறம் சீனாவில் தற்போது சில துறைகள் மீண்டு வரத் தொடங்கியுள்ளன. இதனால் எரிபொருளுக்கான தேவை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சேமிப்பு அதிகரிப்பு

சேமிப்பு அதிகரிப்பு

சீனா மட்டும் அல்ல, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்காக கோரியுள்ளனவாம். ஆக லாக்டவுன் காலத்திலும் நாங்கள் மெதுவாக எங்களது எண்ணெய் தொட்டிகளில் சேமிப்புகளை அதிகரித்து வருகிறோம் என்றும் அந்த அறிக்கையில் வெளியாகியுள்ளது.

இங்கு இருந்து தான் இறக்குமதி

இங்கு இருந்து தான் இறக்குமதி

மேலும் விசாகப்பட்டினம், பாரதீப், கொச்சி மற்றும் மும்பையில் உள்ள கடலோர சுத்திகரிப்பு நிலையங்களில் இது போன்ற இறக்குமதிகள் இருக்கக்கூடும் என்றும் தொழில் வல்லுனர்கள் கூறுகின்றனர். எனினும் மேற்கு கடற்கரை இதற்கு விரும்பதகாத ஒன்றாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு குறைவு

சுத்திகரிப்பு குறைவு

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட பல சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களது வழக்கமான சுத்திகரிப்பினை விட 10 - 40% குறைத்துள்ளனவாம். ஆக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அவற்றின் செயல்திறன் மற்றும் விற்பனை அளவுகளும் குறையும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆறு மாதத்துக்கு தேவை குறையும்

அடுத்த ஆறு மாதத்துக்கு தேவை குறையும்

தற்போது ஏற்றுமதி 4 -5 cargoes அளவில் சிறியதாக இருக்கும். சீனாவினை போல சில கிழக்கு ஆசிய நாடுகளும் உள்ளன. ஆக அவற்றிடமிருந்து சில ஆர்டர்களை பெறுகிறோம். இதே லாக்டவுன் காலத்தில் இந்தியாவில் அதன் தேவை 40% மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 7.323 மில்லியன் டன் எரிபொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடப்பு ஆண்டில் அது குறையும். மேலும் அடுத்த ஆறு மாதத்திற்கு தேவையானது சற்று குறைவாகவே இருக்கும்.

டீசல் தேவையும் குறையும்

டீசல் தேவையும் குறையும்

அதே போல டீசல் தேவையும் வழக்கத்தினை விட பாதியாக குறைந்துள்ளது. எனினும் கடந்த சில தினங்களாக சற்று ஏற்றம் கண்டு வருகிறது. எனினும் மீண்டும் சரியான நிலையினை அடைய இன்னும் சில மாதங்கள் ஆகும். எனினும் அடுத்த ஆறுமாதங்களுக்கு இந்த பொருட்களின் விற்பனை மந்த நிலையில் தான் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+