இந்தியாவில் பெரும்பாலும் கோடீஸ்வரர்கள் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, பூனே உள்ளிட்ட சில மெட்ரோ நகரங்களில் தான் அதிகளவில் உள்ளார்கள்.
எனவே இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் உள்ள நபர் 1 கோடீஸ்வரர்கள் யார் யார்? அவர்களது சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
மும்பை
இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக மும்பை உள்ளது. இங்குதான் இந்தியாவின் பெரும்பாலான கோடீஸ்வரர்கள் உள்ளார்கள். மும்பையில் மிகப் பெரிய கோடீஸ்வரர் என பார்த்தால் அது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தான். இவரது சொத்து மதிப்பு 89.9 பில்லியன் டாலர்.
டெல்லி
இந்தியாவில் மும்பைக்கு அடுத்தபடியாக அதிக கோடீஸ்வர்கள் வசிக்கும் நகரம் டெல்லி. ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் இங்குதான் வசிக்கிறார். இந்தியாவின் 3வது மிகப் பெரிய பணக்காரரான இவரது செல்வ மதிப்பு 25.6 பில்லியன் டாலர்.
கொல்கத்தா
ஸ்ரீ சிமெண்ட் நிறுவன தலைவர் பெனு கோபால் பங்கூர் கொல்கத்தாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக உள்ளார். இவரது செல்வ மதிப்பு 6.7 பில்லியன் டாலர். இந்தியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் இவர் 19வது இடத்தில் உள்ளார்.
பெங்களூரு
இந்தியாவின் சிலிக்கான் சிட்டியாக உள்ள நகரம் பெங்களூரு. பெங்களூருவின் நம்பர் 1 கோடீஸ்வரர் அசிம் பிரேம்ஜி. இவரது செல்வ மதிப்பு 9.1 பில்லியன் டாலர். இந்தியாவின் 12வது பணக்காரராக இவர் உள்ளார்.
சென்னை
சென்னையின் மிகப் பெரிய கோடீஸ்வரராக சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் உள்ளார். இவரது செல்வ மதிப்பு 22 பில்லியன் டாலர். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 77வது இடத்தில் உள்ளார்.
ஹைதராபாத்
ஹைதராபாத்தின் நம்பர் 1 கோடீஸ்வரர் முரளி திவி. பார்மா நிறுவன தலைவரான இவரது செல்வ மதிப்பு 7.8 பில்லியன் டாலர். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்தில் இவர் இருக்கிறார்.
பூனா
இந்தியாவில் அதிக கொரோனா தடுப்பூசிகளைத் தயாரித்து விநியோகம் செய்து வரும் சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனா வாலா. இவரது செல்வ மதிப்பு 21.8 பில்லியன் டாலர். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இவர் இருக்கிறார்.
அகமதாபாத்
உலகின் 6வது மிகப் பெரிய கோடீஸ்வரரான கவுதம் அதானி அகமதாபாத்தின் நம்பர் 1 கோடீஸ்வரராக உள்ளார். இவரது செல்வ மதிப்பு 105.4 பில்லியன் டாலர். ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள செல்வ மதிப்பை வைத்து இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications