இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் அசத்தி வரும் வேளையில் தற்போது தோனி, கோலி வரிசையில் ஸ்டார்ட்அப் முதலீட்டு சந்தையில் இறங்கியுள்ளார். ஐபில் போட்டியில் படு பிசியாக இருக்கும் ஷ்ரேயஸ் ஹெல்த் டெக் துறையில் கால் பதித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் பிரபலமான வீரர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாடுவதை தாண்டி பிற துறையில் தான் அதிகப்படியான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். சிச்சின், கும்ளே துவங்கி தோனி, கோலி தாண்டி இன்று ஷ்ரேயஸ் ஐயர் வரையில் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்து பெரும் பணத்தைத் திரட்டி வருகின்றனர்.

ஹெல்த் டெக் தளமான கியூரெலோ (Curelo) நிறுவனத்தில் ஷ்ரேயஸ் முதலீடு செய்துள்ளார். கியூரெலோ நிறுவனம் சுமார் ரூ.10 கோடி நிதி திரட்டும் முதலீட்டு சுற்றை நடத்தியுள்ளது. இதில், ஷ்ரேயஸ் ஐயர் குறிப்பிடப்படாத தொகையை முதலீடு செய்துள்ளார்.
கியூரெலோ நிறுவனத்தின் இந்த முதலீட்டு சுற்றில் ஐ.ஐ.எம். அகமதாபாத் கல்லூரியின் ஸ்டார்ட்அப் இங்குபேட்டார் ஐ.ஐ.எம்.ஏ. வென்சர்ஸ் (IIMA Ventures), அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு இந்திய பணக்காரர்களின் குடும்ப அலுவலகங்கள், ஜீ5 (Zee5) நிறுவனர்களில் ஒருவரான தருண் கத்யால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த புதிய முதலீடு மூலம், கியூரெலோ நிறுவனம் தனது செயல்பாடுகளை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தவும், ஒழுங்கமைப்படுத்தப்படாத பரிசோதனை கூடங்களை இணைத்து ஒன் ஸ்டாப் சொல்யூஷன் அளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது, இதில் இந்த 10 கோடி ரூபாய் முதலீடும் பெரிய அளவில் பலன் தரும்.
கியூரெலோ நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் அர்பிட் ஜெயஸ்வால் (Arpit Jayswal) என்பவரால் நிறுவப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள பரிசோதனை கூடங்களை ஒன்றிணைத்து, வீட்டிலிருந்தே மாதிரி சேகரிப்புக்கான (home sample collection) ஒன் ஸ்டாப் சொல்யூஷன் வழங்கும் ஒரு ஹெல்த் டெக் தளமாகும்.
தனது முதலீடு குறித்து கருத்து தெரிவித்த ஷ்ரேயஸ் ஐயர், "கியூரெலோவின் பயணத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நோயறிதல் மற்றும் சுகாதாரத் துறையில் அவர்களின் புதுமையான மற்றும் வாடிக்கையாளர் நட்பு முறை எனக்கு மிகவும் கவர்ந்தது. இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்றுதெரிவித்துள்ளார்.
கியூரெலோ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜெயஸ்வால் கூறுகையில்,"கியூரெலோ முதலீட்டாளராக ஷ்ரேயாஸ் ஐயரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நோய் கண்டறியும் சந்தையை நாங்கள் தொடர்ந்து மறுவரையறை செய்து வருகிறோம். எங்கள் தளத்தின் மீதான அவரது நம்பிக்கை கூடுதல் மதிப்பைச் சேர்க்கிறது என்று தெரிவித்தார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications