இந்திய பங்கு சந்தையானது இன்று நல்ல ஏற்றத்தினை கண்டுள்ள நிலையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பானது தொடர்ந்து ஏற்றத்தினை கண்டுள்ளது. 1 மாத உச்சத்தினை எட்டியுள்ளது.
இந்தியா ரூபாயின் மதிப்பானது 82 ரூபாயினை உடைத்துள்ளது. ஒரு வேளை இது தொடர்ந்தால், இந்த நிலை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு சிறந்த மாதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அன்னிய முதலீடுகள் வரத்து என்பது தொடரும் நிலையில், சந்தையானது மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு ரூபாய்க்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் மதிப்பு நிலவரம்
இதற்கிடையில் தான் இன்று ரூபாயின் மதிப்பானது இன்று 81.90 ரூபாய் என்ற லெவலை எட்டியுள்ள நிலையில், முடிவில் 81.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இன்று காலை தொடக்கத்தில் 35 பைசா அதிகரித்து, 82.24 ரூபாயாக தொடங்கிய நிலையில், கடந்த அமர்வில் 82.59 ரூபாயாகவும் முடிவடைந்திருந்தது.
சந்தை ஏற்றம்
இது அதானி குழுமத்தில் 1.8 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், அதானி குழும பங்குகள் பலவும் அப்பர் சர்க்யூட் ஆகின. இதன் காராணமாக இன்று இந்திய பங்கு சந்தையானது 1000 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றம் கண்டுள்ளது.
நல்லதொரு மாற்றம்
ரூபாயில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நல்லதொரு விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த திங்கட்கிழமையன்று ரூபாயின் மதிப்பானது 82.94 ரூபாயினை எட்டியது. இந்த நிலையில் தற்போது 82 ரூபாயினை உடைத்துள்ளது.
இதே அமெரிக்க டாலரின் மதிப்பானது 104.88 என்ற லெவலை எட்டியுள்ளது. இது அமெரிக்க டாலரின் மதிப்பானது 4.05% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
12 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம்
இந்திய பங்கு சந்தையானது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் வலுவாக காணப்பட்டது. பிஎம்ஐ பிசினஸ் குறித்தான இன்டெக்ஸ் வணிகம் 57.2 ஆக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் 59.4 ஆகவும் இருக்கலாம். இது கடந்த 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.


Click it and Unblock the Notifications