இந்தியாவில் வேகமெடுத்தும் வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து 75 ரூபாய்க்கு மேலேயே இருந்து வந்தது.
எனினும் இன்று சற்றே அதில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நேர வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு சற்றே அதிகரித்து, 74.73 ரூபாயாக வர்த்தகமாகியது.

இது நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக பரவி வந்தாலும், கொரோனா தடுப்பூசியானது வெற்றிகரமான மனிதர்களுக்கு போட்டு சோதனை முடிந்து விட்டதாக ஆக்ஸ்போர்டு வெளியிட்டது. இது வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதார வீழ்ச்சிகளுக்கு மத்தியில், நம்பிக்கையூட்டும் விதமாக இருந்து வருகிறது.
இந்த தடுப்பூசியானது அதிகாரப்பூர்வமாக இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றாலும், இது அமலுக்கு வரும் பட்சத்தில் பொருளாதாரம் விரைவில் மீண்டும் விடும். நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றெல்லாம் என்னப்படுகின்றது. இதற்கு மத்தியில் தான் இன்றைய பங்கு சந்தைகளும் ஏற்றம் கண்டு வருகின்றன.
இதே இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள விருப்பமுள்ளவர்களையும் தேர்தெடுத்து வருவதாகவும் எய்ம்ஸ் கூறியுள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம். இதற்கிடையில் தான் பங்கு சந்தையில் அன்னிய முதலீடுகளும் அதிகரித்துள்ளன. கடந்த திங்கட்கிழமையன்று மட்டும், 1,709.97 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவித்துள்ளனர்.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் 1.47 கோடியினை தொட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 6.09 லட்சத்தினை தொட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் பலி எண்ணிக்கையானது 28 ஆயிரத்தினை கடந்துள்ளது. இதே பாதிப்பு எண்ணிக்கையானது 11 லட்சத்தினையும் கடந்துள்ளது.
ஆனால் இந்த நிலையிலும் கூட முன்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 466 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 37,883 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 130 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 11,152 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
ஆக இப்படி ஒரு நிலையில் தான் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தற்போது 74.77 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications