நவம்பருக்கு பிறகு நடந்த தரமான சம்பவம்.. சிறந்த 1 நாள் ஏற்றம்.. ரூபாய் மதிப்பு ரூ.81.78 ஆக ஏற்றம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தையானது இன்று பலமான செல்லிங் அழுத்தத்தில் காணப்பட்டது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, 82 ரூபாய்க்கு கீழாக முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து பார்க்கும்போது சிறந்த ஒரு நாள் லாபத்தினை எட்டியுள்ளது.

தொடர்ந்து இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகளான அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பத்திர சந்தையில் அழுத்தம் காணப்படுகின்றது.

இந்திய டெக், ஐடி ஊழியர்கள் சோகம்.. இனி 'இது' நடக்காதா..?! இந்திய டெக், ஐடி ஊழியர்கள் சோகம்.. இனி 'இது' நடக்காதா..?!

ரூபாய் முடிவு

ரூபாய் முடிவு

இந்திய ரூபாயின் மதிப்பானது டாலருக்கு எதிராக 81.78 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று மட்டும் 0.70% ஏற்றத்தினை கண்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஒரு நாளில் இந்த அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. சந்தை முடிவுக்கு சில நிமிடங்களுக்கு முன்பே 81.70 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 82.36 ரூபாயாக முடிவுற்றது.

 வலுவான ஏற்றம்

வலுவான ஏற்றம்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்திய சந்தையில் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் அன்னிய முதலீடானது இந்திய சந்தையில் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்திய சந்தையானது வலுவாக காணப்படுகிறது. இதன் காரணமாக ஆசிய நாணயங்களில் இந்திய ரூபாயின் மதிப்பானது வலுவான ஏற்றத்தில் காணப்படுகிறது.

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

தொடர்ந்து அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு மற்ற நாடுகளின் நாணயத்தில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து டாலரின் மதிப்பானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. தொடர்ந்து அன்னிய முதலீடானது சந்தையில் அதிகரிக்க இது அதிகரிக்க வழிவகுக்கலாம். இதற்கிடையில் தான் இன்று ரூபாயின் மதிப்பானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.

டாலர் மதிப்பு சரிவு

டாலர் மதிப்பு சரிவு


அமெரிக்க மத்திய வங்கியானது 25 அடிப்படை புள்ளிகள் வட்டியினை அதிகரித்த பிறகு, கடந்த இரண்டு அமர்வுகளில் டாலர் இன்டெக்ஸ் ஆனது 2% சரிவில் காணப்படுகின்றது. மத்திய வங்கி 4.75 - 5% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சிபிஐ விகிதம்

சிபிஐ விகிதம்


சிபிஐ விகிதம் வரவிருக்கும் நாட்களில் 81.50 ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி பணவீக்க விகிதம் 6.5% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த நவம்பர் மாதத்தில் 7.1% ஆக இருந்தது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

கடந்த நவம்பர் மாதத்தில் ரூபாயின் மதிப்பானது, 80.51 ரூபாயாக அதிகரித்திருந்த நிலையில், ஜனவரி 3 அன்று 82.94 ரூபாய் என்ற உச்சத்தினை எட்டியது. இதற்கிடையில் மேற்கோண்டு ரூபாய் மதிப்பானது 81.70 ரூபாய் என்ற லெவலிலும், 81.45 ரூபாய் என்ற லெவலிலும் காணப்பட்டது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 82.10 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rupee ரூபாய்
English summary

Indian rupee below Rs.82: best single day gain since November against dollar

Indian rupee below Rs.82: best single day gain since November against dollar
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X