ரூபாய் மதிப்பு 90.41 ஆக சரிவு.. ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மாயம்.. புலம்பும் இந்திய நிறுவனங்கள்..!

இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை வர்த்தகத்தை தொடர்ந்து வியாழக்கிழமையும் பெரியளவிலான சரிவை பதிவு செய்து புதிய சரிவை எட்டியது. அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 90.41 என்ற அளவிற்கு சரிந்துள்ளது. நேற்று பதிவான 90.29 என்ற மோசமான நிலையை கடந்து, கூடுதலாக சரிந்துள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல்முறையாக 90 என்ற நிலையை தாண்டியதால், இதன் மதிப்பு தொடர்ந்து சரியும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து தொடர்ந்து பணத்தை வெளியேற்றுவதே ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

ரூபாய் மதிப்பு 90.41 ஆக சரிவு.. ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மாயம்.. புலம்பும் இந்திய நிறுவனங்கள்..!

ஆசியாவிலேயே மோசமான நிலையில் இந்திய ரூபாய்:
இந்த ஆண்டு மட்டும் ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது. ஆசிய நாணயங்களில் இந்திய ரூபாய் தான் மிகவும் மோசமாக செயல்பட கூடிய நாணயமாக மாறியுள்ளது. இதற்கு மத்தியில் புடினின் இந்திய பயணம் பங்குச்சந்தையையும், வெளிநாட்டு முதலீட்டையும் பதற்றத்தில் வைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் புடின் ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு வரும் போது பங்குச்சந்தை குறியீடுகள் சரிவை சந்தித்து வருகிறது.

இதேவேளையில் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 90 ரூபாய் அளவீட்டை கடந்து 90.41 ரூபாய் என்ற நிலையை அடைந்திருக்கும் காரணத்தால் நுகர்வோர் சந்தையை இது பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் வர்த்தகம் செய்யும் நிறுவவனங்கள் அனைத்தும் அக்டோபர் மாதம் வரையில் ரூபாய் மதிப்பு 85-86 என்ற அளவில் இருக்கும் என்று கணித்து தான் தனது பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்து வந்தது.

தற்போது திடீரென ரூபாய் மதிப்பு 90 ரூபாயை தாண்டி வீழ்ச்சி அடைந்த காரணத்தால் அனைத்து நிறுவனங்களின் உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும் குறிப்பாக இறக்குமதி பொருட்களை அதிகம் நம்பி இயங்கும் நிறுவனங்கள் தனது தயாரிப்பின் விலையை மறுஆய்வு செய்து திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த திருத்தம் வந்தால் எந்தெந்த பொருட்களின் விலை உயரும்..? மக்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும்..?

எந்தெந்த பொருட்களின் விலை உயரும்..?
ரூபாய் மதிப்பு 90ஐத் தாண்டியது மூலம் அதிகம் பாதிக்கப்படுவது, இறக்குமதி பொருட்களை அதிகம் சார்ந்து இருக்கும் துறை தான். உதாரணமாக ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி, ஹோம் அப்லையன்ஸ், அழகு சாதனப் பொருட்கள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகள் தான். இப்பிரிவு பொருட்களின் விலை உயர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்தப் பொருட்களில் 30 முதல் 70 சதவீதம் வரை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையே சார்ந்துள்ளதால் இந்த விளைவு. மெமரி சிப், ஸ்மார்ட்போன் மாடியூல், காப்பர் பாகங்களின் விலை டாலரில் உயர்ந்ததால், உற்பத்தி செலவு கணிசமாகக் அதிகரித்துள்ளது.

இதனால் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் முதல் இந்தப் பொருட்களின் விலை 3 முதல் 7 சதவீதம் வரை உயரும் என்று பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய அரசு செப்டம்பர் 22 முதல் GST குறைப்பால் இந்தியா முழுவதும் ஏற்பட்ட விற்பனை உயர்வு இந்த விலை உயர்வு காரணமாக பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மத்திய அரசு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி குறைப்பு அமல்படுத்திய பின்பு, பொருட்களின் விலையை குறைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அறிவித்த நிலையில் நிறுவனங்கள் விலை குறைத்தன. ஆனால் அக்டோபர் மாதம் முதலே மூலப்பொருட்கள் விலை உயர துவங்கிய நிலையில், மத்திய அரசின் உத்தரவால் விலையை உயர்த்தாமல் தவிர்த்தன. இப்போது ரூபாய் மதிப்பு 90ஐத் தாண்டியதால், வேறு வழியின்றி விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தாண்டி இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் விற்பனையும் இதே நெருக்கடியை எதிர்கொள்கின்றன. ஜிஎஸ்டி குறைப்பால் ஆட்டோமொபைல் துறை வாகனங்களின் விலையைக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு பயனைத் தந்தன.

இதனால் கடந்த சில மாதங்களாக விற்பனை சூடு பிடித்திருந்தது. ஆனால் இப்போது ரூபாய் வீழ்ச்சியால் இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்கள் விலை உயர்ந்துள்ளதால், வாகன விலைகளையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது புதிய வாகனங்கள் வாங்க விரும்பும் மக்களை பெரிதும் பாதிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+