ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் இருக்கும் அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம் அல் குவைன் ஆகிய 7 பகுதிகளில் இருக்கும் இந்தியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதியில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மென்பொருள் துறை முதல் கட்டிட வேலை வரையில் பல துறையில் இந்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில் முக்கியமான வாய்ப்பு உருவாகியுள்ளது.
ரூபாய் மதிப்பு
இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா சரிந்து 82.35 ரூபாயாக உள்ளது. இதேவேளையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் நாணயத்திற்கு எதிரான மதிப்பு 22.39 ஆக உள்ளது.
ரூபாய் வீழ்ச்சி
இந்திய ரூபாய் மதிப்பு அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், அதிகரித்து வரும் ரெசிஷன் அச்சம், கச்சா எண்ணெய் விலை ஆகியவை ரூபாய் மதிப்பின் வலிமையைத் தொடர்ந்து குறைத்து வருகிறது.
ஐக்கிய அரபு நாடுகள்
இந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளில் இகுக்கும் இந்தியர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருக்கும் அனைத்து இந்தியர்களுக்குத் தாய் நாட்டுக்கு பணத்தை அனுப்பினால் கூடுதலான பணத்தைப் பெற முடியும்.
அமெரிக்கா
குறிப்பாக அமெரிக்காவில் இருப்பவர்கள் டாலர் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் வேளையில் தாய் நாட்டுக்குப் பணத்தை அனுப்பினால் கூடுதலான பணம் பெற முடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்தித் தங்கம் வாங்குவோர், வீடு மற்றும் நிலம் வாங்க நினைப்பவர்கள் முதலீடு செய்யலாம்.
UAE திர்ஹாம் நாணயம்
சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை அதிகமாக இருக்கும் காரணத்தால் நாணய மதிப்பில் அதிகப்படியான தடுமாற்றம் நிலவி வருகிறது. உதாரணமாக UAE திர்ஹாம் நாணயத்திற்கு எதிராக ரூபாய் மதிப்பு அக்டோபர் 7, 8, 9 தேதிகளில் 22.50 முதல் 22.55 ரூபாய் வரையில் இருந்தது.
வரலாற்று உச்சம்
ஆனால் 22.39 ரூபாயாக உள்ளது, கடந்த ஒரு மாதத்தில் 21.60 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் வரலாற்றிலேயே UAE திர்ஹாம் நாணயத்திற்கு எதிராக ரூபாய் மதிப்பு முதல் முறையாக 22.55 ரூபாய் தொட்டு உள்ளது. இதை NRI-கள் சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications