தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் ரூபாய்.. இனி எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

இந்தியாவில் இதுவரை 67,152 பேர் கொரோனாவால் தாக்கம் அடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 2,206 பேராக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் லாக்டவுனில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், இன்னும் முழுமையாக தொழில் துறைகள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. இது பொருளாதாரம் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற உணர்வினையே அளித்து வருகிறது.

இந்திய ரூபாய் வீழ்ச்சி

இந்திய ரூபாய் வீழ்ச்சி

இதற்கிடையில் சரிந்து வரும் பொருளாதாரம் இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணுமோ? தெரியவில்லை. இதனையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. மேலும் அமெரிக்க டாலரின் மதிப்பானது, சற்று வலிமை பெற்றுள்ள நிலையில், ரூபாயின் மதிப்பானது வீழ்ச்சி கண்டுள்ளது.

எவ்வளவு தான் வீழ்ச்சி கண்டுள்ளது?

எவ்வளவு தான் வீழ்ச்சி கண்டுள்ளது?

அமெரிக்காவில் சரிந்து வரும் பொருளாதாரத்தினை ஈடுகட்ட அந்த நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில் தான் அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 19 பைசா வீழ்ச்சி கண்டு 75.74 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. முந்தைய சந்தை முடிவில் ரூபாயின் மதிப்பு 75.55 ரூபாயாக முடிவடைந்திருந்த நிலையில், இன்று 75.54 முதல் 75.77 ரூபாய்க்குள் வர்த்தகம் ஆகியது.

கடன் திரட்ட திட்டம்

கடன் திரட்ட திட்டம்

கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில், இந்திய அரசு கடனை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், 10 ஆண்டுகள் பத்திர லாபம் இன்று உயர்வு கண்டுள்ளது. குறிப்பாக 2021 மார்ச் வரையிலான நிதியாண்டில் 12 டிரில்லியன் டாலர் அளவுக்கு கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய பின்னரே இந்த ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் 7.8 டிரில்லியன் டாலர்களாக திரட்ட திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்கு சந்தை சரிவு

பங்கு சந்தை சரிவு

இதோடு இந்திய பங்கு சந்தைகளும் சந்தை தொடக்கத்தில் இருந்த லாபத்தினை தக்க வைத்துக் கொள்ள தவறி விட்டன. பிறகு நண்பகல் வேளையில் வர்த்தகத்தில் பெரிதும் மாற்றம் இன்றியே காணப்பட்டது. இதுவும் ரூபாயின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதற்கிடையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதுவும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ரூபாயின் மதிப்பு 6 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது கவனிக்கதக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+