மீண்டும் 82.76 ஆக சரிந்த ரூபாய்.. அமெரிக்காவின் அந்த முடிவு தான் காரணமா?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது மீண்டும் 82.76 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.

சமீபத்திய அமர்வுகளாகவே ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றம் காணாமல் இருந்து வந்தது.

இதற்கிடையில் கடந்த அமர்வில் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது பணவீக்கத்தினை குறைக்கும் விதமாக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு சரிவு

ரூபாயின் மதிப்பு சரிவு

எனினும் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு இந்திய சந்தையில் இருந்து முதலீடுகளை வெளியேற்றலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ரூபாயின் மதிப்பானது சரிவினை கண்டுள்ளது.

செல்லிங் பிரஷர்

செல்லிங் பிரஷர்

முன்னதாக ரூபாயின் மதிப்பானது 82.76 ரூபாயாக சரிவினைக் கண்டு இருந்தது. இது கடந்த அமர்வின் முடிவில் 82.45 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

அமெரிக்காவின் மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதத்தினை அதிகரித்து இருந்தாலும், பொருளாதாரம் குறித்த கவலையானது எழுந்துள்ளது. இது சந்தையில் அழுத்தமான செல்லிங் பிரஷரை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

புராபிட் புக்கிங்

புராபிட் புக்கிங்

தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்தால் அது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தின் மத்தியிலேயே, இந்திய சந்தையில் புராபிட் புக்கிங் இருந்திருக்கலாம். ஆக இதுவும் சந்தை சரிவுக்கு முக்கிய காரணம் எனலாம். இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பானது 103.50 என்ற லெவலில் இருந்து 104.25 என்ற லெவலுக்கு அதிகரித்தது.

 மற்ற வங்கிகளின் முடிவு

மற்ற வங்கிகளின் முடிவு

டாலரின் மதிப்பு தொடர்ந்து உச்சம் எட்டி வரும் நிலையிலும் வரவிருக்கும் கூட்டத்தில், பேங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் என பலவும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது மேற்கோண்டு ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

 சரிவு ஏன்?

சரிவு ஏன்?

வட்டி விகிதமானது ஒரு புறம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பொருளாதார வளர்ச்சியானது மெதுவாகவே இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு ரூபாயின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இன்றைய சந்தை நிலவரம்?

இன்றைய சந்தை நிலவரம்?

சென்செக்ஸ் இன்று 878.88 புள்ளிகள் அல்லது 1.40% சரிவினைக் கண்டு, 61,799.03 ஆக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 245.4 புள்ளிகள் அல்லது 1.32% சரிவினைக் கண்டு, 18,414.90 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

கடந்த சில வாரங்களாகவே அன்னிய முதலீட்டி விகிதமான து கணிசமாக அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் வெளியேறியுள்ளது.அன்னிய முதலீட்டாளர்கள் இன்று மட்டும் 710.74 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 260.92 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். ஆக இதுவும் இன்று சந்தையின் போக்குக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

 

 மேலும் சரியலாம்

மேலும் சரியலாம்

தொடர்ந்து அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரித்துள்ள நிலையில், இது ஐடி பங்குகள்ம் மெட்டல் பங்குகள் என பல துறை சார்ந்த பங்குகளும் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. இந்த போக்கானது இன்னும் சில தினங்களுக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் இன்னும் சில தினங்களுக்கு ஏற்ற இறக்கம் என்பது அதிகரிக்கலாம். இது மேற்கோண்டு ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+