கடந்த சில வாரங்களாகவே இந்திய சந்தையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், ரூபாயின் மதிப்பு பெரியளவில் ஏற்றம் காணாவிட்டாலும், சரிவினைக் காணாமல் வலுவாக காணப்பட்டது.
எனினும் இன்றைய அமர்வில் 34 பைசா சரிவினைக் கண்டு, 73.82 ரூபாயாக காணப்படுகின்றது.
இந்த சரிவானது தொடருமா? என்ன காரணம்? ஏன் இந்தஅளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. நிபுணர்கள் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.
அன்னிய முதலீடு வரத்து
சர்வதேச சந்தைகளானது ஏற்றத்தில் காணப்படும் நிலையில், இன்று இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. எனினும் சந்தையில் அன்னிய முதலீடு வரத்து என்பது சற்று வலுவாகவே காணப்படுகின்றது. எனினும் உள் நாட்டு முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் காரணத்தினால் சந்தையை விட்டு வெளியேறி வரும் நிலையில், சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது.
ரூபாய் நிலவரம்
இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று சரிவினைக் கண்டுள்ளது. இன்று காலை தொடக்கத்திலேயே சற்று சரிவினைக் கண்டு 73.82 ரூபாயாக தொடங்கியது. இது கடந்த அமர்வினை காட்டிலும் 34 பைசா சரிவாகும். இது கடந்த வெள்ளிக்கிழமையன்று 73.48 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்கு சந்தை நிலவரம்
இதே டாலரின் மதிப்பானது 0.16% அதிகரித்து, 93.34 ஆக இருந்தது.
இதற்கிடையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 524.96 புள்ளிகள் குறைந்து, 58,490.93 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 188.25 புள்ளிகள் குறைந்து, 17,396.90 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
நிபுணர்கள் கணிப்பு
இதற்கிடையில் ரூபாயின் மதிப்பானது 73.80 - 73.90 ரூபாய்க்குள் முடிவடையலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இது வரும் நாட்களில் 74.20 - 74.50 ரூபாய் வரையில் சரியலாம் என்றும் கணித்துள்ளனர். எப்படியிருப்பினும் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டிருந்தாலும், மூன்றாம் அலையின் பயம் சந்தையில் காணப்படுகின்றது.
என்ன காரணம்
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் ஆசியாவின் சிறந்த நாணயமாக இருந்த ரூபாயின் மதிப்பானது, அதன் பிறகு தொடர்ந்து சரியத் தொடங்கியது. எனினும் கடந்த சில வாரங்களாகவே பெரியளவில் ,மாற்றம் காணமல் இருந்தது. இது கொரோனாவின் இரண்டாம் அலைக்கு சற்றே ஓய்ந்துள்ள நிலையில் பொருளாதாரம் சற்றே மீண்டு வந்து கொண்டுள்ளது. இது சந்தைக்கு சாதமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications