நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக பரவி வரும் நிலையில், பொருளாதாரம் வீழ்ச்சி காணுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பானது, முந்தைய அமர்வின் முடிவு விலையானது 0.7% வீழ்ச்சி கண்டு, 74.89 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது ஈக்விட்டி சந்தையில் இன்று காலையில் வர்த்தக தொடக்கத்திலேயே 29 பைசா குறைந்து, 73.63 ரூபாயாக தொடங்கியது. இது 74.79 ரூபாயாக தொடங்கியது. இது வரையில் இன்று 74.964 ரூபாய் வரையில் வீழ்ச்சி கண்டுள்ளது.
அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், லாக்டவுன் நடவடிக்கைகள் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை, 6 நாட்களுக்கு முழுமையாக லாக்டவுன் அமலாகும் என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,75,196 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இதே 1620 இறப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக மகாராஷ்டிராவில் 68,631 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதே உத்திரபிரதேசத்தில் 30,566 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதே டெல்லியில் 25,462 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஜிடிபி விகிதம் குறைப்பு
கொரோனாவின் தாக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நிலையில், பொருளாதாரம் வீழ்ச்சியினை சந்திக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. இதனால் மதிப்பீட்டு நிறுவனங்கள் மீண்டும் ஜிடிபி விகிதத்தினை குறைக்க ஆரம்பித்துள்ளன. முன்னணி மதிப்பீட்டு நிறுவனம் ஒன்று ஜிடிபி விகிதத்தினை 10% ஆக குறைந்துள்ளது.
ஆய்வு நிறுவனங்கள் குறைப்பு
இதே ஆய்வு நிறுவனமான நோமுரா நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்புகளை 13.5%ல் இருந்து 12.6% ஆக குறைத்துள்ளது. இதே ஜேபி மார்கன் ஜிடிபி விகிதத்தினை 11% ஆகவும், யுபிஎஸ் 10% ஆகவும், இது முன்னர் 11.5% ஆகவும் கணித்திருந்தது. இதே சிட்டியின் கணிப்பு 12% ஆகவும் குறைத்துள்ளது. ஆக இப்படியொரு நிலையில் தான் பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இதனால் ரூபாயின் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications