இந்தியாவில் வேகமெடுத்து வரும் கொரோனாவின் காரணமாக இன்னும் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சி காணுமோ என்ற எண்ணமே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
உண்மையில் சொல்லப்போனால் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதிலும் லாக்டவுன் தளர்வுக்கு பின்பு இது மிக வேகமாக பரவத் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில், பாதிப்பு எண்ணிக்கையானது 9,06,752 ஆக அதிகரித்துள்ளது. இதே பலி எண்ணிக்கையானது 23,727 ஆக அதிகரித்துள்ளது.
ரூபாய் மதிப்பு
ஆக இப்படி ஒரு சூழ்நிலைக்கு மத்தியில் தான் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 75.40 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த திங்கட்கிழமையன்று சந்தை முடிவில் 75.19 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்திலேயே 15 பைசா வீழ்ச்சியில் தொடங்கியது. இது தற்போது மேற்கொண்டு 21 பைசா வீழ்ச்சி கண்டுள்ளது.
பங்கு சந்தையும் சரிவு?
இந்திய பங்கு சந்தையில் அழுத்தம் காணப்படும் நிலையில் அதன் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளது. தற்போதைய நிலையில் (11.17 மணியளவில்) மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 594 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 36,098 புள்ளிகளாகவும், இதுவே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 176 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 10,626 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
மீண்டும் வீழ்ச்சி காணலாம்
ரூபாயின் மதிப்பான நான்கு நாள் வீழ்ச்சிக்கு பிறகு பெரிய மாற்றமில்லாமல் முடிவடைந்த நிலையில், மீண்டும் ரூபாயின் மதிப்பு 75.5 ரூபாய் வரையில் மீண்டும் வீழ்ச்சி காணலாம் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று ஐசிஐசிஐடேரக்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதனை நிரூபிக்கும் விதமாக ரூபாயின் மதிப்பு 75.40 ரூபாயாக காணப்படுகிறது.
பல நாட்டு நாணயங்களின் மதிப்பு குறைந்துள்ளது
இன்று தங்கத்தின் விலையானது டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்துள்ள நிலையில் 1,800 டாலருக்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது. எனினும் உலகளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை பற்றிய கவலைகளும் மறுபுறம் இருந்து வருகிறது. அமெரிக்கா சீனாவிடையே அதிகரித்து வரும் பதற்றம், மேலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா டாலருக்கு எதிரான பல நாட்டு நாணயங்களின் மதிப்புகள் குறைந்துள்ளன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications