டெல்லி: நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கிடையில் நிபுணர்கள் ஜூன் மாத மத்தியில் தான் தாக்கம் குறைய ஆரம்பிக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இது இந்திய சந்தைகள் ஏற்றத்தினை கண்டுள்ள போதிலும் கூட, ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து இரண்டாவது நாளாக சற்று வீழ்ச்சி கண்டு வருகிறது.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
அமெரிக்க சீன பிரச்சனைகளினால் ஆசிய நாணயங்களில் இந்திய ரூபாய் உள்ளிட்ட பல நாணயங்கள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. இன்று காலை நேர வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பானது 75.90 ரூபாயாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது 75.74 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இன்று காலை நேர வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது, தற்போது சற்று ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்து இருந்தாலும், நேற்றைய முடிவுடன் ஒப்பிடும்போது ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. நேற்றைய முடிவில் ரூபாயின் மதிப்பு 75.72 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆசிய நாணயங்கள் வீழ்ச்சி
நடப்பு ஆண்டில் இது வரை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இது கொரோனாவின் காரணமாக இந்திய பங்கு சந்தைகள் அழுத்தம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றம் மூலம் ரூபாயின் மதிப்பு எடை போடப்படுகிறது.
முதலீடுகள் வெளியேற்றம்
பரிவர்த்தனை தரவுகளின் படி, புதன் கிழமை 334.74 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதே உலகளாவிய எண்ணெய் அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்காலம் ஒரு பேரலுக்கு 2.48 சதவீதம் குறைந்து 33.88 டாலராக உள்ளது. இதே டாலரின் மதிப்பு 0.15% வீழ்ச்சி கண்டு 98.90 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம்
இதற்கிடையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவின் பாதிப்பினால் இதுவரை சுமார் 4,531 பேர் பலியாகியுள்ளனர். கிட்டதட்ட 1.58 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டேட்டாக்கள் உள்ளது
இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து ஏராளமான தரவுகள் இன்று உள்ளது. குறிப்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடு, ஏப்ரல் மாதத்தில் நீடித்த பொருட்கள் குறித்தான தரவு, வேலையின்மை உரிமைகோரல்கள், கச்சா எண்ணெய் இருப்பு குறித்த டேட்டாக்கள் உள்ளது. ஆக இதுவும் இந்திய ரூபாயின் மதிப்பில் எதிரொலிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications