டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று காலையில் வர்த்தக தொடக்கத்திலேயே 29 பைசா குறைந்து, 73.63 ரூபாயாக தொடங்கியது. இது அமெரிக்கா டாலரின் வலிமை மற்றும் சர்வதேச முதலீடுகளின் எதிரொலியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதோடு உள்நாட்டு சந்தையிலும் முதலீட்டாளர்கள் தொழில்துறை உற்பத்தி குறித்தான குறியீடு குறித்து கண்கானித்து வருகின்றனர். இது பலவீனமான பொருளாதாரத்தினை எடைபோட தரவாக அமையும் என்பதால், ரூபாயின் மதிப்பானது சற்று சரிவில் காணப்படுகிறது.
அதோடு உள்நாட்டு முதலீட்டாளர்களும் சரி, அன்னிய முதலீட்டாளர்களும் சரி, இந்தியா சீனா இடையேயான எல்லை பதற்றத்தினை தொடர்ந்து கண்கானித்து வருகின்றனர். ஆக இதன் எந்தவொரு விரிவாக்கமோ அல்லது பிரச்சனையோ ரூபாயின் மதிப்பிலும் சந்தையிலும் பிரதிபலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் பெரியதொரு மாற்றமில்லாமல் காணப்படுகிறது.
இதற்கிடையில் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் இன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 73.20 ரூபாய் முதல் 73.82 ரூபாய் வரையில் இருக்கலாம் என்று கணித்துள்ளது.
இதே ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோயின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் மீட்பு என்பது மென்மையடையலாம். இதன் பொருளாதார வளர்ச்சி இனி வரும் காலாண்டுகளிலும் சரிவில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. இதன் காரணமாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 72.5 ரூபாய் வரையில் வீழ்ச்சி காணலாம் என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஜிடிபி விகிதமானது அமெரிக்காவின் ஜிடிபி விகிதத்தினை விட மோசமாக தான் உள்ளது என்று தற்போது அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. அதோடு அமெரிக்காவில் பொருளாதாரத்தினை தூண்டும் விதமாக, மீண்டும் ஒரு பெரிய தூண்டுதல் தொகுப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாயின் மதிப்பு சரிந்து காணப்பட்டாலும், மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 268 புள்ளிகள் அதிகரித்து, 38,685 ஆக காணப்படுகிறது, இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து 11,422 ரூபாயாகவும் காணப்படுகிறது. இந்த நிலையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 73.49 ரூபாயாக தற்போது காணப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications