டெல்லி: நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பங்கு சந்தையில் ஏற்ற இறக்கமானது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை நேர வர்த்தகத்திலேயே டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது மீண்டும் சரிவினை சந்தித்தது. குறிப்பாக காலை நேரத்தில் 6 பைசா வீழ்ச்சி கண்டு 74.84 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.

இதே இந்திய சந்தைகளும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா டாலரின் மதிப்பானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதேயாகும். கடந்த சில தினங்களாக சரிவில் இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பானது, இன்று சற்று வலுவடைந்து காணப்படுகிறது. டாலரின் மதிப்பானது 0.28% அதிகரித்து 93.89 ஆக உள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தியானது ஜூன் மாதத்தில் 16.6% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த வீழ்ச்சியானது பல துறைகளிலும் காணப்படுகிறது. குறிப்பாக உற்பத்தி, சுரங்கம், மின்சார உற்பத்தி, கேப்பிட்டல் குட்ஸ் மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பலவும் வீழ்ச்சியினை கண்டுள்ளன.
இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையும் சற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் ரூபாயின் மதிப்பானது சற்று வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளது.
இதோடு அமெரிக்க பத்திர சந்தையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அன்னிய முதலீடுகள் வரத்து குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவும் இந்திய சந்தைகள் சரிவில் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதன் எதிரொலி இந்திய ரூபாயின் மதிப்பிலும் காணலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 96 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 38,310 ரூபாயாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 28 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,293 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது தற்போது 74.87 ரூபாயானது 0.14% வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications