அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றம் காண விட்டாலும், தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.
தற்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.07 பைசா அதிகரித்து 73.38 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பானது 73.25 - 73.15 ரூபாயாக இருக்கலாம் என்றும் ஐசிஐசிஐ டேரக்ட் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பானது 2 பைசா குறைந்து, 73.37 ரூபாயாக முடிவடைந்திருந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 73.35 ரூபாயாக தொடங்கியுள்ளது. எனினும் தற்போது சற்று ரூபாயின் மதிப்பு அதிகரித்து 73.35 ரூபாயாக காணப்படுகிறது.
இதே அமெரிக்கா டாலரின் மதிப்பு, ஆறு நாணயங்களுக்கு எதிராக 0.03% குறைந்து 93.39 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
நிபுணர்கள் டாலரின் மதிப்பு சற்று தடுமாற்றத்தில் உள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று அதிகரித்துள்ளது. மேலும் இதற்கு சாதகமாக இந்திய பங்கு சந்தைகளும் ஏற்றம் கண்டு வருகிறது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 381 புள்ளிகள் அதிகரித்து 40,925 ஆக வர்த்தகமாகி வருகிறது.
இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 102 புள்ளிகள் அதிகரித்து, 11,999 ஆக வர்த்தகமாகி வருகிறது.
அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் 1,656.78 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். அதே நேரத்தில் உள் நாட்டு நிறுவன முதலீட்டாளர்கல் அக்டோபர் 19 அன்று இந்திய பங்கு சந்தையில் 1,621.73 கோடி ரூபாய் நிகர விற்பனையாளர்களாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு மேலும் ரூபாய்க்கு ஆதரவாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.84% வீழ்ச்சி கண்டு, 42.26 டாலர்களாக சரிந்து காணப்படுகின்றது. உலகளவில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க லிபியத் திட்டம் குறித்த கவலைகளால் கச்சா எண்ணெய் விலை சரிந்தே காணப்பட்டது. எனினும் அமெரிக்காவின் நிதித் தூண்டுதல் குறித்தான நம்பிக்கையால் பெரும் சரிவு தடுக்கப்பட்டது. ஆக இதுவும் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது மீண்டும் ஏற்றத்தினை காண வழிவகுத்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications