அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.
தற்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா அதிகரித்து 74.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆசிய நாணயங்களின் மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே 74.50 - 74.68 ரூபாயாக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிகிழமையன்று 74.64 ரூபாயாக முடிவடைந்த நிலையில், தற்போது 74.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
நிபுணர்கள் டாலரின் மதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று அதிகரித்துள்ளது. மேலும் இதற்கு சாதகமாக இந்திய பங்கு சந்தைகளும் ஏற்றம் கண்டு வருகிறது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 465 புள்ளிகள் அதிகரித்து 36,488 ஆக வர்த்தகமாகி வருகிறது.
இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 155 புள்ளிகள் அதிகரித்து, 10,762 ஆக வர்த்தகமாகி வருகிறது.கொரோனா நெருக்கடியிலும் நாட்டின் முதன்மை தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, வலுவான கடன் வளர்ச்சியினைக் கண்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகிறது. ஆக இதுவும் ரூபாயின் மதிப்பு ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
தற்போது கச்சா எண்ணெய் விலையும் சப்ளை சற்று குறைந்துள்ளதால் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் தற்போது மேலும் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கமானது கச்சா எண்ணெய்க்கான தேவையை குறையை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூபாயின் மதிப்பு மேலும் ஏற்றம் காண வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு மற்ற ஆசிய நாணயங்களோடு ஒப்பிடும்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று ஏற்றம் கண்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் 0.24 பைசா சரிவு கண்டிருந்த நிலையில், திங்கட்கிழமையன்று காலையில் 0.28 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
கரன்சி சந்தையில் செயல்பாட்டு நேரம் லாக்டவுன் நேரத்தில் சற்று குறைந்துள்ளது. இது தற்போது 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை வர்த்தகமாகி வருகிறது. இது சாதாரணமாக 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வர்த்தமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications