வாரத்தின் இறுதி நாளான இன்று இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக 74.58 ரூபாயாக அதிகரித்து காணப்படுகிறது.
கிட்டதட்ட 0.32 பைசா அதிகரித்து தற்போது காணப்படுகிறது. நேற்றைய சந்தை முடிவில் 73.90 ஆக முடிவடைந்த ரூபாயின் மதிப்பு, இன்று காலையில் சந்தை தொடக்கத்திலேயே 73.75 ரூபாயாக தொடங்கியது. அதே தற்போது இன்னும் முதலீட்டாளார்களுக்கு குதூகலப்படுத்தும் விதமாக 74.58 ரூபாயாகவும்காணப்படுகிறது.

சரி என்ன காரணம்? நேற்று ஏற்பட்ட பலத்த சரிவுக்கு பிறகு இவ்வளவு பெரிய ஏற்றத்தினை கண்டுள்ளது ஏன் வாருங்கள் பார்க்கலாம்.
இந்தியா ரூபாய் மட்டும் அல்ல, ஆசிய நாணயங்கள் அனைத்துமே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், சீனாவின் யுவான் பலமான ஏற்றம் கண்டுள்ளது. இது சந்தைக்கு ஏதுவாகவும் அமைந்துள்ளது எனலாம். இதற்கிடையில் இந்திய ரூபாயும் சற்று ஏற்றம் கண்டுள்ளது.
நேற்றைய சந்தையில் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ், தற்போது 596 புள்ளிகள் அதிகரித்து 37,150 ஆக காணப்படுகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 174 புள்ளிகள் அதிகரித்து 10,980 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் தூண்டுதல் தொகுப்பு பற்றிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்த்துக் கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா டாலருக்கு எதியான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.
அதோடு அமெரிக்காவின் வேலையின்மை நலனுக்காக விண்ணப்பமும் அதிகரித்து வரும் நிலையில், இது பொருளாதாரம் மெதுவான வேகத்தில் வளர்ச்சி கண்டு வருவதனையே காட்டுகிறது. அதே சமயம் முதலீட்டாளர்கள் மத்தியில் பெருத்த எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினரும் குடியரசு கட்சியினரும், நிதி ஊக்கம் சம்பந்தமாக, ஒரு சூமுக நிலையை அடைவதற்கு தொலைவில் உள்ளார்கள் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் டாலரின் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து கொண்டுள்ளது. இதனால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு பலமடைந்து வருகின்றது.
கச்சா எண்ணெய் விலையானது சற்று அதிகரித்து இருந்தாலும், தேவை வீழ்ச்சியானது, ரூபாயின் மதிப்பிற்கு ஏற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications