இந்திய ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஏழு மாத உச்சத்தை எட்டி, டாலருக்கு எதிராக 84.53 ரூபாய் என்ற நிலையை எட்டியுள்ளது. ஆனால் நேற்றைய வர்த்தக முடிவில் வெறும் 1 பைசா மட்டுமே உயர்ந்தது. இந்திய சந்தையில் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து வருவதும், உள்நாட்டு வர்த்தக சூழல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் சாதகமாக இருக்கும் காரணத்தாலும் ரூபாய் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதேவேளையில் இந்தியா-பாகிஸ்தான் பதற்றங்கள் அதிகரித்தால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையலாம் என்று நாணய வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 83.76 என்ற உயர்ந்த மதிப்பை பதிவு செய்து, ஏழு மாத உச்சத்தை எட்டியது. ஆனால், நாள் முழுவதும் ஏற்ற இறக்கமான வர்த்தகத்தால் இந்த உயர்வு நிலைத்து நிற்கவில்லை, மேலும் நாள் முடிவில் ரூபாய் 84.53 ஆக முடிந்தது, இது முந்தைய நாள் முடிவு மதிப்பை விட 1 பைசா மட்டுமே உயர்ந்தது. புதன்கிழமை, ரூபாய் 42 பைசா உயர்ந்து 84.54 ஆக முடிந்திருந்தது.
நாணய வர்த்தகர்களின் கூற்றுப்படி, ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 2.37 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. இது உள்நாட்டு சந்தையில் இருக்கும் அதிகப்படியான டிமாண்ட்-ஐ காட்டுகிறது. மேலும், இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி குறியீடு (PMI) ஏப்ரலில் 10 மாத உச்சத்தை எட்டியது, இது முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இந்த தரவுகள் ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
வங்கிகளுக்கு இடையிலான நாணயப் பரிமாற்றத்தில், டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 83.98 இல் தொடங்கி, நாள் முழுவதும் 83.76 என்ற உயர்ந்த அளவையும், 84.55 என்ற குறைந்த அளவையும் பதிவு செய்துள்ளது. இதே நேரத்தில், அமெரிக்க டாலரின் வலிமையை ஆறு நாணயங்களுக்கு எதிராக அளவிடும் டாலர் குறியீடு 0.39% குறைந்து 99.85 ஆக இருந்தது.
சர்வதேச கச்சா எண்ணெய் அளவுகோலான ப்ரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.51% குறைந்து ஒரு பீப்பாய்க்கு 61.81 டாலராக வர்த்தகமானது. இது ரூபாய் மதிப்பு உயர்வுக்கு சாதகமாக அமைந்தது, ஏனெனில் எண்ணெய் இறக்குமதி செலவு குறைவது இந்தியாவுக்கு நன்மையாகும்.
ரூபாய் மதிப்பு உயர்ந்தாலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் அதிகரித்தால், இந்த உயர்வு விரைவாக இழக்கலாம் என்று நாணய வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த கால புவிசார் அரசியல் பிரச்சனைகளின் போதும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நிலை உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications