செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவீதம் வளர்ச்சி அடைந்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. பொருளாதார வல்லுனர்கள் இக்காலக்கட்டத்தில் 7.3 சதவீதம் அளவிலான வளர்ச்சி மட்டுமே பதிவு செய்யும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் கணிப்புகளை உடைந்து புதிய உயர்வை பதிவு செய்திருக்கும் வேளையில், இந்திய ரூபாய் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு குறைந்து வருகிறது.
நவம்பர் மாதம் முழுவதும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து, கடந்த மாத இறுதியில் டாலருக்கு எதிராக 89.46 என்ற புதிய குறைந்தப்பட்ச அளவைத் தொட்டது. டிசம்பர் மாதத்திலும் இந்தச் சரிவு தொடர்ந்து, டிசம்பர் 1ஆம் தேதி 89.73 என்ற வரலாற்று குறைந்த அளவை எட்டியது பெரும் சோகம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவான 89.49 என்ற முந்தைய சரிவையும் தான்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 0.1 சதவீதம் சரிந்து தற்போது 89.5475 அளவில் வர்த்தகமாகி வருகிறது.
செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவீதம் வளர்ந்தது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இப்படியொரு நல்ல செய்தி வந்தும் ரூபாய் ஏன் வலுவடையவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதோடு ரூபாய் மதிப்பு குறைந்துள்ள காரணத்தால் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் விலை உயருமான என்ற அச்சம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடாவின் பொருளாதார வல்லுநர் அதிதி குப்தா ரூபாய் மதிப்பு குறித்து கூறுகையில், "சிறப்பான ஜிடிபி வளர்ச்சி முதலீட்டு சந்தையை உற்சாகப்படுத்தவில்லை. வெளிநாட்டு வர்த்தகம், முதலீட்டுப் பாய்ச்சல் பற்றிய கவலைகள் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி தாக்கத்தை குறைத்துள்ளது" என்றார். உலக அளவில் டாலர் வலுவாக இருப்பதும், இறக்குமதி செலவு அதிகரிப்பதும் ரூபாயை பலவீனப்படுத்துகின்றன என பொட்டில் அடித்தார் போல் தெரிலித்தார்..
மேலும் பேங்க் ஆஃப் பரோடா அறிக்கையில் டிசம்பர் மாதத்தில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து பலவீனமாகவே இருக்கும் என்று கணிக்கிறது. அதிதி குப்தா கூறுகையில், "அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் நிலையற்ற தன்மையே ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதேபோல் ரூபாய் மதிப்பின் போக்கு இனி வரும் காலத்தில் அமெரிக்கா - இந்தியா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் முக்கிய காரணமாக இருக்கும் என அறிவித்துள்ளது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கெனவே சந்தையில் பிரதிபலித்துவிட்டது. இதனால் டாலர் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. இதேவேளையில் இந்திய ரிசர்வ் வங்கி இந்த வாரம் நடக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்காது என்றும் கணிக்கப்படுவதாக அதிதி குப்தா இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பேங்க் ஆஃப் பரோடா கணிப்பின்படி டிசம்பர் முழுவதும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 89 முதல் 90 ரூபாய் அளவில் தான் வர்த்தகமாகும் என தெரிவித்துள்ளது. இது இறக்குமதியாளர்களுக்கு செலவு அதிகரிக்கும் என்றாலும், ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சாமானிய மக்களுக்கு இது பெட்ரோல், எரிவாயு, மின்னணு பொருட்கள் விலை சற்று உயர்வுது மூலம் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications