டெல்லி: கடந்த சில அமர்வுகளாகவே இந்திய சந்தையானது பெரும் ஏற்ற இறக்கத்தினை சந்தித்து வரு கின்றது.
இது அடுத்து எவ்வளவு சரியுமோ? இனி என்னவெல்லாம் செய்யப்போகின்றதோ? இன்னும் எவ்வளவு தான் சரியும்? ஏன் இந்த வீழ்ச்சி? நிபுணர்களின் கருத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சரிவிலேயே காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த சில தினங்களாகவே மிக மோசமான சரிவிலேயே இருந்து வருகின்றது.
ரூபாய் வீழ்ச்சி
இதன் காரணமாக ஆசிய நாணயங்களிலேயே மிக மோசமான நாணயமாக இருந்து வருகின்றது. நடப்பு காலாண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பு 2.2% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் பங்கு சந்தையில் இருந்து மட்டும் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான மூலதனம் வெளியேறியுள்ளது.
முதலீடுகள் வெளியேற்றம்
சமீபத்தில் கோல்டுமேன் சாச்ஸ், நோமுரா குழுமம் ஈக்விட்டிகளின் மதிப்பினை குறைத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடந்து இந்திய பங்குகளில் இருந்து முதலீடுகளை வெளியேற்றி வருகின்றன. இதனை பங்கு சந்தை தரவுகள் மூலமும் தெரிந்து கொள்ள முடிகிறது. உள்நாட்டு முதலீடுகள் என்பது அதிகரித்து வந்தாலும், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறிக் கொண்டுள்ளன.
முக்கிய காரணிகள்
இது ஓமிக்ரான் அச்சம், பணவீக்கம், ஓமிக்ரான் அதிகரிப்பால் பொருளாதார வளர்ச்சி குறித்த அச்சம், ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி குறித்தான நடவடிக்கைகள் என பல காரணிகளை முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.
மேலும் நிபுணர் ஒருவர் எண்டிடிவிக்கு அளித்த பேட்டியில், பணவியல் கொள்கைகள் மாற்றம், அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது ரூபாயின் சரிவுக்கு மேலும் காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதம்
தொற்று நோய்க்கு மத்தியில் ரூபாயின் மதிப்பால் ஏற்றுமதியை ஆதரிக்கும். அதேவேளையில் இது இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கத்தின் அபாயத்தின் பிரச்சனையையும் எதிர்கொள்கிறது. இதனால் மத்திய வங்கி வட்டி விகிதங்களை நீண்டகாலத்திற்கு மிக குறைந்த அளவில் வட்டி விகிதத்தினை பராமரிப்பதை கடினமாக்கலாம்.
எவ்வளவு வீழ்ச்சி காணலாம்?
இதற்கிடையில் மார்ச் மாத இறுதிக்குள் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78 ரூபாயாக சரியலாம் என QuantArt Market Solutions கணித்துள்ளது.
இது கடந்த ஏப்ரல் 2020 மாதத்தில் 76.90 ரூபாயினை எட்டிய நிலையில் அதனை கடந்துள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 4 வது ஆண்டாக சரிவினையே கண்டு வருகின்றது. நடப்பு ஆண்டில் மட்டும் 4% வீழ்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications