அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத அளவுக்கு 82 ரூபாயினை தாண்டி முதல் முறையாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அமெரிக்க பத்திர சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகிறது.
இதற்கிடையில் தான் ரூபாயின் மதிப்பானது 82.30 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த அமர்வில் 81.89 ரூபாயாக முடிவடைந்திருந்திருந்த நிலையில், காலை அமர்விலேயே 0.5% வீழ்ச்சி கண்டுள்ளது. இன்று காலை தொடக்கத்திலேயே 82.19 ரூபாயாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் விலை?
இது சர்வதேச சந்தையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 93 டாலர்களை எட்டியுள்ளது. இது இந்த வாரத்தில் மட்டும் ஓபெக்கின் உற்பத்தி குறைப்பு முடிவுக்கு பிறகு 11% ஏற்றத்தினை கண்டுள்ளது. ஓபெக்கின் உற்பத்தி குறைப்பால், மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது 100 டாலர்களை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர், பத்திர சந்தை
இதனிடையே அமெரிக்காவின் 10 வருட பத்திர சந்தையானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. டாலரின் மதிப்பானது கடந்த மாதத்தில் 109.80 என்ற லெவவில் இருந்து 112.12 என்ற லெவலுக்கு உயர்ந்துள்ளது. இதற்கிடையில் வர்த்தகர்கள் தற்போது பண்ணை அல்லாத வேலை வாய்ப்பு குறித்தான தரவுக்காக காத்துக் கொண்டுள்ளனர். இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு?
ஏற்கனவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் நிபுணர்கள் ரூபாயின் மதிப்பானது 83 - 84 என்ற லெவலுக்கு வீழ்ச்சி காணலாம் என கணித்துள்ளனர்.
இது மிகப்பெரிய முன்னணி பொருளாதார நாடுகளில் ரெசிசன் அச்சம் நிலவி வரும் நிலையில், இது கரன்சிகளில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
மேலும் சரியலாம்
அமெரிக்காவின் வேலை தரவானது இன்று வெளியாகவுள்ள நிலையில், ரூபாயின் மதிப்பானது இன்று 82.80 ரூபாய் நோக்கி சரியாலாம் என எதிர்பார்க்கிறோம் என ரிலிகேர் புரோக்கிங் தனது கணிப்பில் தெரிவித்துள்ளது.
ஓபெக் முடிவால் மேற்கொண்டு பணவீக்கம் அதிகரிக்கலாம் . இது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது கரன்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் சரிவு
செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரூபாயின் மதிப்பானது 2.20% சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறிய நிலையில் சரிவினைக் கண்டுள்ளது. இது பங்கு சந்தையிலும் தொடர்ந்து சரிவினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ரூபாயின் மதிப்பினை மேலும் சரிவினைக் காண வழிவகுக்கும் விதமான, நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இது மேற்கொண்டு கரன்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications