ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி காணலாம்.. எச்சரிக்கும் நிபுணர்களின் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து அழுத்தத்திலேயே இருந்து வருகின்றது.

 

இது தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை மற்றும் மற்ற முக்கிய கமாடிட்டிகளின் விலையானது அதிகரித்து வரும் நிலையில், இன்னும் ரூபாயின் மதிப்பானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து சர்வதேச அளவில் பணவீக்கத்தின் மதிப்பானது அதிகரித்து வரும் நிலையி, இது ரூபாயின் மதிப்பிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் மதிப்பு சரிவு

ரூபாய் மதிப்பு சரிவு

உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் ரூபாயின் மதிப்பானது நடப்பு ஆண்டில் 5% சரிவினைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலையானது உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் தான் ரூபாயின் மதிப்பானது ஆல் டைம் உச்சமான 78.34 ரூபாயாக உச்சம் கண்டது.

இறக்குமதியே அதிகம்

இறக்குமதியே அதிகம்

இது முன்னதாக 78.32 ரூபாயாக சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா அதன் எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்ய 85%மும், எரிவாயு தேவைக்காக 50%மும் இறக்குமதியினையே சார்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைக்கு மத்தியில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கும். இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கட்டணத்தினை மே மாதத்தில் இருமடங்கு அதிகரித்து, 19.19 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

முதலீடுகள் வெளியேற்றம்
 

முதலீடுகள் வெளியேற்றம்

மேலும் அமெரிக்காவின் மத்திய வங்கியின் வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், அது அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் வெளியேற காரணமாக அமைந்துள்ளது. இதுவும் ரூபாயின் மதிப்பு சரிவுக்கு காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய செலவாணி சரிவு

அன்னிய செலவாணி சரிவு

இறக்குமதியினை பூர்த்தி செய்ய இந்தியா சரியான அளவில் அன்னிய செலவாணி கையிருப்பும் வைத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு, இந்தியாவில் சமீப வாரங்களாக அன்னிய செலவாணி குறைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆக இதுவும் ரூபாய் சரிவுக்கு வழிவகுத்தது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், தொடர்ந்து சந்தையானது அழுத்தினை கண்டு வருகின்றன. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பு 77.5 - 79.5 என்ற லெவலில் காணப்படலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையில் கமாடிட்டி பொருட்கள் விலை மற்றும் எண்ணெய் விலையினை பொறுத்து இதில் மாற்றம் இருக்கலாம். அடுத்த சில காலாண்டுகளில் 80 ரூபாயினையும் தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rupee ரூபாய்
English summary

Indian rupee may depreciate between 79 and 80 rupees: Experts

The rupee has depreciated by 5% in the current year amid the Ukraine-Russia crisis. Meanwhile, experts predict that the rupee will find a level of 77.5-80.
Story first published: Monday, June 27, 2022, 18:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X