இந்திய ரூபாயின் மதிப்பானது நடப்பு ஆண்டில் மிக மோசமான சரிவினைக் கண்டது. இது மேற்கொண்டு சரியுமா? நடப்பு ஆண்டின் நிலையே அடுத்த ஆண்டிலும் தொடருமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
இந்திய ரூபாயின் மதிப்பானது நடப்பு ஆண்டில் மோசமான சரிவினைக் கண்டது.
குறிப்பாக டிசம்பர் மாதத்தில் அதன் லைஃப் டைம் லோவினை தொட்டது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது எனலாம்.
ரூபாயின் மதிப்பு அதிகரிக்கலாம்
2023ம் ஆண்டில் இந்திய பங்கு சந்தையானது ஏற்றம் காணலாம். இதன் காரணமாக ரூபாயின் மதிப்பும் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் பணவீக்கத்தின் மத்தியில் என்பது தான் ஆச்சரியமே.
ஆசியாவில் பெஸ்ட்
அடுத்த ஆறு மாதங்களில் ரூபாயின் மதிப்பானது மிகப்பெரிய அளவில் ஏற்றம் காணலாம். குறிப்பாக ஆசிய நாணயங்களில் ரூபாயின் மதிப்பானது வலுவான ஏற்றத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஈக்விட்டி சந்தைகளில் அன்னிய முதலீடுகளின் வரத்தானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தையானது ஏற்றம் காணலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சந்தை ஏற்றம் காணலாம்
சர்வதேச நாடுகளில் ரெசசன் அச்சம் இருந்து வரும் நிலையில், அன்னிய முதலீடுகள் இந்தியாவின் பக்கம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு இந்திய சந்தை ஏற்றம் காண வழிவகுக்கலாம்.
மேலும் தொடர்ந்து கமாடிட்டிகளின் விலையும் குறைந்து வருவதால், இது வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வழிவகுக்கலாம். இதுவும் ரூபாய்க்கு ஆதரவாக அமையலாம்.
9 ஆண்டு உச்சம்
இதற்கிடையில் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது, கடந்த செப்டம்பர் காலாண்டிலேயே 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டது. இது பல கமாடிட்டிகளின் விலையானது உச்சத்தில் இருந்த நிலையில் அந்த அளவுக்கு உச்சம் தொட்டது. ஆனால் இது நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
ரூபாயின் மதிப்பு சரிவு
மேலும் அமெரிக்க டாலரின் மதிப்பும் தொடர்ந்து உச்சத்தில் காணப்பட்ட நிலையில், அதுவும் ரூபாயின் மதிப்பு சரிவடைய காரணமாக அமைந்தது. இந்தியாவின் ஏற்றுமதியும் இந்த காலகட்டத்தில் சரிவடைந்த நிலையில், இது மேற்கொண்டு ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் ரூபாயின் மதிப்பானது நடப்பு ஆண்டில் 11% சரிவினைக் கண்டுள்ளது.
முக்கிய லெவல்
எப்படியிருப்பினும் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூபாயின் மதிப்பானது, 81.50 - 83.50 ரூபாய் என்ற லெவலுக்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி தனது இருப்பினை வலுப்படுத்த தேவையான முயற்சியினை எடுக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கப்பார்கின்றனர்.
முதலீடுகள் வெளியேற்றம்
நடப்பு ஆண்டில் இதுவரையில் 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈக்விட்டிகளை அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து விற்பனை செய்து வெளியேறியுள்ளனர். இதே கடந்த 2021ல் 3.76 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கியிருந்தனர். இந்த விகிதமானது 2023ல் முக்கியமான தாக்கத்தினை ரூபாயின் மதிப்பில் ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு ரூபாயின் மதிப்பிற்கு ஆதரவாக அமையலாம் .
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications