Exclusive: ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி காணலாம்.. நிபுணர்களின் கவலையளிக்கும் கணிப்பு..!

மும்பை: தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த சில வாரங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்றே ஆறுதல் கொடுக்கும் வகையில் 24 பைசா அதிகரித்து, 75.02 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் சற்றே ஆறுதல் கொடுக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய சந்தையானது இன்று காலை ஏற்றத்தில் தொடங்கி சரிவில் முடிவடைந்தது.

சரிவினைக் காணலாம்

சரிவினைக் காணலாம்

இது குறித்து நிபுணர்களிடம் பேசிய போது, வரும் வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். மேலும் அன்னிய செலவாணியில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம். இந்திய சந்தைகளில் தொடர்ந்து அன்னிய முதலீடுகளானது வெளியேற்றம் கண்டு வருகின்றது. இதனால் இந்திய சந்தையில் சரிவு ஏற்படலாம். இதன் காரணமாக ரூபாயின் மதிப்பும் மீண்டும் சரிவினைக் காணலாம்.

மோசமான வீழ்ச்சி

மோசமான வீழ்ச்சி


கடந்த சில தினங்களுக்கு முன்பு இதன் காரணமாக, ஆசிய நாணயங்களிலேயே மிக மோசமான நாணயமாக உள்ளது. நடப்பு காலாண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பு 2.2% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் பங்கு சந்தையில் இருந்து மட்டும் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான மூலதனம் வெளியேறியுள்ளது.

இது மோசமான வீழ்ச்சி கண்டதே இனி இது எந்தளவுக்கு சரிவினைக் காணும், கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன என்பது பற்றி அபான்ஸ் குழுமத்தின் EVP & கேப்பிட்டல் அன்ட் கமாடிட்டியின் தலைவர் மகேஷ் குமாரிடம் பேசினோம்.

மீடியம் டெர்மில் எப்படியிருக்கும்?

மீடியம் டெர்மில் எப்படியிருக்கும்?

அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது. இது இன்னும் வலுவடையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பானது மீடியம் டெர்மில் 76 - 76.40 ரூபாய் என்ற லெவலை தொடலாம் என கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை குறித்து?

கச்சா எண்ணெய் விலை குறித்து?

இதே கச்சா எண்ணெய் விலை குறித்து கூறுகையில், பலவீனமான டாலர் மதிப்பிற்கு மத்தியில் எண்னெய் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன. எனினும் சீன அரசு பொருளாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக, அரசு முதலீடுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும். இதனால் தொழிற்துறையில் வளர்ச்சி பெருகும். குறிப்பாக விநியோக சங்கிலியை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதே அரசின் முக்கிய இலக்காக இருக்கும்.

முக்கிய சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

முக்கிய சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

ஆக இத்தகைய பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் சீன அரசு, பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதே சீனாவின் முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.
எனினும் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் என்பது மேற்கொண்டு கட்டுப்பாடுகளை அதிகரிக்க தூண்டலாம். இது எண்ணெய் தேவையை குறைக்க வழிவகுக்கலாம். எப்படியிருப்பினும் கச்சா எண்ணெய்-ன் முக்கிய சப்போர்ட் விலையானது 66.2 - 67.42 டாலர்கள் என்ற லெவலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 73.4 - 75.25 டாலர்களாக இருக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+