அமெரிக்க டாலருக்கு நிகரான இன்றைய ரூபாயின் மதிப்பு 84.71 ஆக இருந்தது. அதன் வரலாறு காணாத வீழ்ச்சியிலிருந்து 4 பைசா சற்று உயர்ந்துள்ளது. இருப்பினும், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் இருந்து வரும் நேர்மறை போக்குகள் அமெரிக்க நாணயத்தின் உலகளாவிய வலிமையால் நடுநிலையானது.
குறிப்பாக அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கும் என அந்நிய செலாவணி வர்த்தகர்கள் கூறுகின்றனர். வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் 84.72 இல் தொடங்கப்பட்டது. குறுகிய வரம்பில் வர்த்தகம் செய்யப்பட்டு 84.71 ஐ எட்டியது. அதன் முந்தைய முடிவை விட 4 பைசா அதிகரித்து பதிவு செய்தது.

புதன்கிழமை, ரூபாயின் மதிப்பு 7 பைசா சரிந்து 84.75 என்ற மிகக் குறைந்த அளவில் முடிவடைந்தது. CR அந்நிய செலாவணி ஆலோசகர்களின் அமித் பபாரி கூறுகையில், "பணவீக்கம் மற்றும் வளர்ச்சி மீதான சமநிலையான கண்ணோட்டம் சந்தை உணர்வை மேம்படுத்தி முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்பதால், டிசம்பர் 6-ம் தேதி RBI-ன் பணவியல் கொள்கை கூட்டம் முக்கியமானதாக இருக்கும் என்று கூறியுளார்.
ரிசர்வ் வங்கியின் உயர்மட்டக் குழு புதன்கிழமை இருமாத நாணயக் கொள்கை மீதான விவாதத்தைத் தொடங்கியது, இதில் சில்லறை பணவீக்கம் மத்திய வங்கியின் சகிப்புத்தன்மை வரம்பை விட அதிகமாக இருப்பதால் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு வெள்ளிக்கிழமை தனது முடிவை அறிவிக்கும்.
2025 ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கி விகிதங்களைக் குறைக்கும் சாத்தியம், இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளுக்கு ஈர்ப்பை அதிகரிக்கக்கூடும். மேலும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முதலீட்டில் ஸ்திரத்தன்மை மற்றும் ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி சந்தை தலையீடு ஆகியவை ரூபாயின் நிலையை மேம்படுத்தலாம். ஆறு நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் வலிமையை அளவிடும் டாலர் குறியீடு 0.05 சதவீதம் குறைந்து 106.26 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதற்கிடையில், உலகளாவிய எண்ணெய் அளவுகோலாக இருக்கும் பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.10 சதவீதம் உயர்ந்து 72.38 டாலராக இருந்தது.
உள்நாட்டு பங்குச் சந்தையில் நிலவரத்தைப் பொருத்தவரையில் இன்று காலை சென்செக்ஸ் 49.20 புள்ளிகள் உயர்ந்து 81,005.53 ஆகவும், நிஃப்டி 47.85 புள்ளிகள் உயர்ந்து 24,515.30 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது. புதன்கிழமை, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளை அதிகம் வாங்கினர். ஒட்டுமொத்தமாக, ரூ.1,797.60 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications