வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது இந்திய ரூபாய் மதிப்பு!! ஈரான் போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு புது சிக்கல்!!

ஈரான் போர் பதற்றம் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. புதன்கிழமையான இன்று காலை ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.0550 ரூபாய் என்ற புதிய குறைந்தபட்ச மதிப்பை எட்டியது.

இதற்கு முன்பு ஜனவரி மாதத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 91.9875 என்ற அளவில் வீழ்ச்சி அடைந்தது. தற்போது அதை விட ரூபாய் மதிப்பு குறைந்து, முந்தைய சாதனையை முறியடித்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பாதுகாப்பான முதலீடு நோக்கிய நகர்வு மற்றும் மத்திய கிழக்கு மோதல்களே இந்தச் சரிவுக்குக் காரணமாகும். மத்திய கிழக்கில் மோதல்கள் தணியும் வரை அழுத்தம் தொடரும் என்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது இந்திய ரூபாய் மதிப்பு!! ஈரான் போரால் இந்தியாவுக்கு புது சிக்கல்!!

ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டு தாக்குதல், பதிலுக்கு வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளன. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி இருக்கிறது. இதனால் கச்சா எண்ணேய் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்த சூழலில் கச்சா எண்ணெ ய் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்குப் போர் உலகப் பங்குச் சந்தைகளை சரிவடைய செய்து, டாலரை வலுப்படுத்தியது. கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு சுமார் $85 ஆக உயர்ந்ததால், இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு அபாயங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. 2026-ஆம் ஆண்டில் இதுவரை ரூபாய் 2 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்து, மோசமான செயல்திறன் கொண்ட வளரும் சந்தை நாணயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

கடந்த மாதம் அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தத்தால் வெளிநாட்டு முதலீடுகள் வந்ததால் ரூபாய் சற்று மீண்டது. ஆனால், மத்திய கிழக்கு மோதல்கள் பரவியதால் அந்த நிவாரணம் குறுகிய காலமே நீடித்தது. இதற்கிடையே இந்திய பங்குச்சந்தையும் கடுமையாக சரிந்துள்ளது. சென்செக்ஸ் தொடக்கத்திலேயே 1,600 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைய, நிஃப்டி 24,400க்கும் கீழ் சென்றது.

ரூபாய் மதிப்பு சரிந்தால் இந்தியாவில் அதிக ரூபாயை கொடுத்து டாலரை வாங்கி பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும். இது இந்தியாவுக்கு கூடுதல் செலவினை ஏற்படுத்தும். இது பங்குச்சந்தையிலும் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+