மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரம் வரலாறு காணாத அளவுக்கு 83 ரூபாயினை தாண்டி வீழ்ச்சி கண்டது. இது அமெரிக்க டாலர் மற்றும் பத்திர சந்தைகள் ஏற்றம் கண்டு வரும் நிலையில் ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டு வருகின்றது.
ரூபாய் மதிப்பு இந்த வாரத்தில் வரலாறு காணாத அளவு 83.29 என்ற அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இன்று சற்று அதிகரித்து முடிவடைந்துள்ளது.
இது கடந்த 6 வாரத்தில் டாலருக்கு எதிராக 4% வீழ்ச்சியினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று எப்படி?
இன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 82.6750 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 82.76 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து உச்சம் எட்டி வரும் நிலையில், ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
ரூபாய் பெட்டர் தான்
எனினும் தொடர்ச்சியாக ஆறாவது வாரமாக ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்த வீழ்ச்சியானது இனியும் தொடரலாம் என்றே நிபுணர்களும் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே நடப்பு ஆண்டில் ரூபாயின் மதிப்பானது 11% சரிவினைக் கண்டுள்ளது. எனினும் மற்ற வளர்ந்து வரும் நாணயங்களுடன் ஒப்பிடும்போது ரூபாயின் மதிப்பானது பரவாயில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்றைய சந்தை நிலவரம்
இன்று சென்செக்ஸ் 104.25 புள்ளிகள் அதிகரித்து, 59,307.15 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 12.35 புள்ளிகள் அதிகரித்து, 17,576.30 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
எதிர்பார்ப்பு
ரூபாயின் மதிப்பானது டிசம்பருக்குள் 83 - 84 ரூபாய் வரையில் சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வரவிருக்கும் மாதத்தில் அன்னிய முதலீடுகளானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூபாயின் மதிப்பானது மேற்கொண்டு வலுவடைய உதவிகரமாக அமையலாம்.
ஆல் டைம் லோ
தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே ஆல் டைம் சரிவினைக் கண்டு வருகின்றது. இது வர்த்தக பற்றாக்குறை, அன்னிய செலவாணி கையிருப்பு சரிவு உள்ளிட்ட சரிவுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது மேற்கொண்டு ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ரூபாய் சரிவு
அமெரிக்க சந்தையானது தொடர்ந்து சரிவில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையும் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. தொடர்ந்து சந்தையில் செல்லிங் அழுத்தம் இருந்து வரும் நிலையில், இந்திய பங்கு சந்தையும் அழுத்தத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவு.. 100-ஐ தாண்டுமா.. இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் சவால்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications