கடந்த சில மாதங்களாக இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.
இது இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கமாடிட்டி பொருட்களின் விலையை அடுத்து, வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது. இது ரூபாயின் மதிப்பு சரிவினைக் காண வழிவகுக்கிறது.
இது இந்த ஆண்டிற்கான புதிய சரிவினைக் நோக்கி தள்ளுகின்றது.
மோசமான சரிவு
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் ஆசியாவின் சிறந்த நாணயமாக இருந்த ரூபாயின் மதிப்பானது, ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் மோசமான சரிவுக்கு தள்ளப்பட்டுள்ளது. இது கொரோனாவின் இரண்டாம் அலைக்கு மத்தியில் தள்ளப்பட்டது. இந்த நிலையற்ற தன்மைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் மற்றும் பல முக்கிய கமாடிட்டிகளின் விலைவாசியானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
வர்த்தக சம நிலையை பாதிக்கும்
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்து வருகின்றது. இது இந்தியாவின் வர்த்தக சம நிலையை பாதிக்கலாம் என ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பி.எல்.சியின் பருல் மிட்டல் சின்ஹா கூறியுள்ளார்.
நிபுணர்கள் கணிப்பு
முன்னதாக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு மற்றும் ஆர்பிஎல் பாங்க் லிமிடெட் ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் 76 ரூபாயினை தொடலாம் என்றும் கணித்துள்ளனர். இதே டாய்ச் வங்கியானது 75 ரூபாயாக கணித்திருந்தது. இதற்கிடையில் தற்போது ரூபாயின் மதிப்பானது கிட்டதட்ட 75 ரூபாய்க்கும் அருகில் உள்ளது.
இன்றைய நிலவரம் என்ன
இது கடந்த வெள்ளிக்கிழமையன்று 74.63 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 15 பைசா அதிகரித்து 74.48 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. இது ஈக்விட்டி சந்தையில் வாங்குவது அதிகரித்துள்ள நிலையில் ஏற்றம் கண்டுள்ளது.
ரூபாய் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிகுந்த பேரழிவுகளை உண்டாக்கியுள்ள நிலையில், தற்போது சற்று குறைந்து வருகின்றது. இது பொருளாதாரத்தினை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வணிக வளர்ச்சிகள் மேம்படும்போது வணிக வளர்ச்சியும் மேம்படும். இதனால் வர்த்தக பற்றாக்குறையும் குறையும். இது ரூபாயின் மதிப்பு அதிகரிக்க வழிவக்கும்.
விரிவடைந்த வர்த்தக பற்றாக்குறை
கடந்த ஜூன் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறையானது 9.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த மே மாதத்தில் 6.3 பில்லியன் டாலராக இருந்தது. இது குறித்து கோடக் மகேந்திரா பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும்போதும் இந்த பற்றாக்குறை தொடரும். இது இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications