அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 13 பைசா அதிகரித்து, 74.81 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக இந்தியா ரூபாயின் மதிப்பானது அதிகரித்துள்ளதோடு, அதே ஊக்கத்தில் இந்திய பங்கு சந்தைகளும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன.

நிபுணர்கள் மத்தியில் இன்று நடக்கவிருக்கும் ஆர்பிஐ கூட்டத்தில், மற்றொரு வட்டி குறைப்பானது இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனாவின் மத்தியில் நிலைமையை கட்டுப்படுத்த இந்த நேரத்தில் ஒரு முறை கடன் மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது என்றும் வாதிடும் நிலையில், ரிசர்வ் வங்கியின் வரவிருக்கும் கூட்டத்தில் மற்றொரு வட்டி வீதம் குறைப்புக்கான சாத்தியம் குறித்து சந்தை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து ஊக்குவிப்பு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, டாலரின் மதிப்பினை அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஆக இது அடுத்த சில அமர்வுகளில் இது குறித்து வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பினால், அடுத்த சில அமர்வுகளில் ஏற்ற இறக்கம் காணப்படலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று ரூபாயின் மதிப்பானது 74.50 ரூபாய் முதல் 75.10 ரூபாய் வரையில் இருக்கலாம் என்று நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து வெளியிடப்பட்ட தரவுகள், ஜூலை மாதத்தில் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன என்பதைக் காட்டுகிறது. இதனால் பல நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பானது வீழ்ச்சி காண்டு காணப்படுகிறது. ஏனெனில் நிறுவனங்களில் ஊதிய குறைப்புகள் மற்றும் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தாக்கம் இவற்றால் மேலும் அழுத்தத்தினை கண்டுள்ளன.
அமெரிக்கா சந்தையின் பங்கேற்பாளர்கள் வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்படும், பண்ணை அல்லாத ஊதிய எண்ணிக்கையை கண்காணிப்பார்கள். இது எதிர்பார்ப்பினை விட பலவீனமான எண்ணிக்கையானது மீண்டும், டாலரின் மதிப்பினை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருக்க கூடும்.
தற்காலிக பரிவர்த்தனை தரவுகளின் படி, செவ்வாயன்று 703.74 கோடி ரூபாய் மதிப்புகள வெளி நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வாங்கியதால், சந்தையில் நிகர வாங்குபவர்களாக இருந்தனர். எனினும் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 1.01% அதிகரித்து 44.88 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications