அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.38 ரூபாயாக சற்றே சரிவில் தொடங்கியுள்ளது.
இது கடந்த வெள்ளிக்கிழமையன்று 73.34 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த வியாழக்கிழமையன்றும் ரூபாயின் மதிப்பானது 73.38 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
சற்று சரிவில் தொடங்கியிருந்தாலும், கடந்த சில வாரங்களாக ரூபாயின் மதிப்பு 73 - 74 ரூபாய்க்குள் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 486 புள்ளிகள் அதிகரித்து, 40469 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 113 புள்ளிகள் அதிகரித்து, 11,875 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.
இன்னும் சில வாரங்களில் அமெரிக்க தேர்தல் வரவிருக்கும் நிலையில், நிதி தூண்டுதலானது தேர்தலுக்கு முன்பு வருவது கஷ்டம் தான் என்ற கவலைகள் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. எனினும் அதே நேரம் சீனா தனது வலுவான காலாண்டு முடிவுகளை வெளியிட தயாராக உள்ளது. இது கடந்த காலாண்டினை விட சற்று உறுதியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு சீனாவின் பொருளாதார வளர்ச்சி தரவுகளுக்கு முன்னதாக, ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. இது அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளை பாதிக்கும் என்ற கணிப்புகளும் இருந்து வருகின்றது. ஆக இதன் காரணமாகவும் ரூபாயின் மதிப்பானது சற்று சரிந்து காணப்படுகிறது.
இது வைரஸின் நுகர்வு மற்றும் உயரும் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்த கவலைகளை ஈடுகட்டுகிறது. இந்த நிலையில் வலுவான டாலரின் மதிப்பானது இந்திய ரூபாயினை 74 ரூபாயினை நோக்கி செல்லலாம் என்றும் ஐசிஐசிஐ டேரக்ட் கூறியுள்ளது.
இதே பெரும் கொரோனா தாக்கம் மத்தியில், கொரோனா தடுப்பூசியானது நடப்பு ஆண்டில் நடைமுறைக்கு வருவது கஷ்டம் தான் என்ற நிலையும் இருந்து வருகிறது. அதோடு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா இருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது. அதோடு இந்தியாவினை பொறுத்த வரையில் தற்போது லாக்டவுனில் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது அடுத்து வரும் காலாண்டில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications