சற்றே ஆறுதல் தந்த ரூபாய்.. 74.82 ரூபாயாக அதிகரிப்பு..!

அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளான இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்து 74.82 ரூபாயாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ஆசிய நாணயங்களின் மதிப்பானது சற்று வலுவடைந்துள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று சற்று அதிகரித்துள்ளது. இன்று காலை தொடக்கத்தில் இருந்தே 74.78 - 74.92 ரூபாயாக இருந்து வருகிறது. கடந்த வெள்ளிகிழமையன்று 74.91 ரூபாயாக முடிவடைந்த நிலையில், தற்போது 74.88 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

 சற்றே ஆறுதல் தந்த ரூபாய்.. 74.82 ரூபாயாக அதிகரிப்பு..!

டாலரின் மதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், அது இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இன்று ரூபாயின் மதிப்பானது 74.79 - 75 ரூபாய் வரையில் இருக்கலாம் என்று ஐஎஃப்ஏ குளோபல் நிறுவனத்தின் அபிஷேக் கோயங்கா கூறியுள்ளார்.

மேலும் இதற்கு சாதகமாக இந்திய பங்கு சந்தைகளும் ஏற்றம் கண்டு வருகிறது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 100 புள்ளிகள் அதிகரித்து. 37,977 ஆக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 46 புள்ளிகள் அதிகரித்து, 11,225 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்கா டாலரின் மதிப்பு 0.09% அதிகரிப்பு 93.01 வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கிடையில் தற்போது கச்சா எண்ணெய் விலையும் சப்ளையும் சற்று குறைந்துள்ளதால் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் தற்போது மேலும் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கமானது கச்சா எண்ணெய்க்கான தேவையை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூபாயின் மதிப்பு மேலும் ஏற்றம் காண வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்தியா மற்றும் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. இதன் காரணமாக பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. இதுவும் முதலீட்டாளர்கள் மத்தியில் பலவீனமான உணர்வாக இருந்து வருகிறது. எனினும் விரைவில் தடுப்பூசியானது கண்டு பிடிக்கப்படலாம் என்ற பாசிட்டிவ் உணர்வு எழுந்துள்ளது. இது ரூபாயின் மதிப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+