மும்பை: நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் வலுப்பெற்று வரும் அதே நேரத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு கொண்டே காணப்படுகிறது.
கடந்த நான்கு தினங்களாகவே தொடர்ந்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருகின்றது.
ஏற்கனவே கொரோனாவால் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தினால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், தற்போது இந்திய சீன எல்லைப் பதற்றத்தினால் ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.
இந்தியா சீனா மோதல்
சீனா இந்தியா எல்லைப்பகுதியான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரும், ராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலையே காணப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.
இரு நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தை
இதற்கிடையில் இந்திய மற்றும் சீன ராணுவங்களின் மூத்த அதிகாரிகள் இடையே இந்தப் பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ தளபதிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காண காரணமாக அமைந்துள்ளது.
ரூபாயின் மதிப்பு இன்று
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 76.21 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது .24 சதவீத வீழ்ச்சியாகும். இந்த நிலையில் இன்று காலை தொடக்கத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 75.89 ரூபாயாக தொடங்கியது. அதிகபட்சமாக 75.78 ரூபாய் வரை சென்ற ரூபாயின் மதிப்பு, அதிகபட்சமாக 76.30 ரூபாய் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.
பங்கு சந்தைகள் ஏற்றம் தான்
எனினும் இந்த பதற்றமான நிலையில் கூட மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 376 புள்ளிகள் அதிகரித்து, 33,605 ஆக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரித்து 9,914 ஆக முடிவடைந்துள்ளது. பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் முடிவடைந்திருந்தாலும், ரூபாயின் மதிப்பானது தற்போது 76.21 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
ஆசிய நாணயங்கள் மதிப்பு
ஆசிய நாணயங்களில் தென் கொரிய நாணயத்தின் மதிப்பு 0.76 சதவீத ஏற்றத்துடனும், இதே பிலிப்பைன்சின் பெசோ 0.59 சதவீத ஏற்றத்துடனும், தாய்வானின் டாலர் 0.19 சதவீத ஏற்றத்துடனும் கானப்படுகிறது. எனினும் தாய் பாட் 0.43 சதவீத வீழ்ச்சியுடனும், இதே ஜப்பானின் யென் 0.03 சதவீத சரிவுடனும், இந்திய ரூபாய் 0.25 சதவீத வீழ்ச்சியுடனும் காணப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications