இலங்கை எடுத்த முடிவு.. இனி இந்திய ரூபாய் தான் எல்லாம்..!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய ரூபாயை பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவது குறித்து இலங்கை அரசு ஆராய்ந்து வருகிறது.

இலங்கை பொருளாதாரம் திவாலானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஐஎம்எப் நிதி உதவிகள் உடன் மெல்ல மெல்ல மீண்டு வரும் வேளையில் தனது நிதி நிலை மற்றும் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்த முக்கியமான முடிவை எடுக்க உள்ளது இலங்கை.

இதன் மூலம் இலங்கை நாணயத்தின் மதிப்பின் சரிவை பெரிய அளவில் குறைக்க முடியும், இது அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் நன்மையை அளிக்கும். இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்தும் திட்டம் எப்படிப்பட்டது..?

 இந்தியா-இலங்கை கலந்துரையாடல்!

இந்தியா-இலங்கை கலந்துரையாடல்!

இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையம் (The High Commission of India in Colombo) மார்ச் 2 அன்று இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு, இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடலை ஏற்பாடு செய்து, சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது.

அக்கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, பாரத் ஸ்டேட் வங்கி, இலங்கை வங்கி பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர்.

vostro/nostro கணக்குகள்

vostro/nostro கணக்குகள்

மேலும் இக்கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான கட்டமைப்பை உருவாக்கிய பிறகு, அந்தந்த நாட்டின் vostro/nostro கணக்குகள் மூலம் இந்திய ரூபாய் மூலம் பரிவத்தனைகளை மேற்கொள்ளத் தொடங்கியதாகவும் இந்தியா ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்!

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்!

இந்த பரிவர்த்தனை மூலம் அதில் பங்குபெறும் வங்கிகள் இந்திய ரூபாய் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து விவரித்துள்ளது. அதன்படி குறைந்த பரிமாற்றச் செலவுகள், சுலபமான வங்கிக் கடன்கள், விரைவாக பணப் பரிவர்த்தனைகள் போன்ற பல பலன்களை அனுபவிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் (tourism and hospitality industry) துறையில் முக்கிய பங்காற்றும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

 இலங்கை அமைச்சர் பாராட்டு!

இலங்கை அமைச்சர் பாராட்டு!

கடந்த ஆண்டு இலங்கைக்கு, இந்தியா வழங்கிய நிதி உதவி, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவு, இலங்கைக்கான சர்வதேச நாணயத்தின் ஆதரவான நிதித் திட்டங்கள், இந்திய அரசு அளித்த நிதி உத்தரவாதங்களுக்கும், மனிதாபிமான அடிப்படையில் அளிக்கப்பட்ட உதவிகளுக்கு மிகவும் நன்றி என இலங்கையின் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க பாராட்டியுள்ளார்.

 3.8 பில்லியன் டாலர் உதவி

3.8 பில்லியன் டாலர் உதவி

அவரைத் தொடர்ந்து இலங்கை மத்திய கலாநிதி பி நந்தலால் அவர்கள், சென்ற ஆண்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 3.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதி உதவிகளை இந்தியா அளித்ததையும், இந்தியா இலங்கை இடையிலேயான INR பரிவர்த்தனைகளுக்கான முயற்சிகள் குறித்தும் பாராட்டியுள்ளார்.

 கோரிக்கை

கோரிக்கை

தி ஐலாண்ட் வெளியிட்ட அறிக்கையின்படி இருநாடுகளுக்கும் இடையேயான INR பயன்பாட்டை முழு அளவிலான மூலதனம் மற்றும் வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளுக்கும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இதை விரிவாக்கம் செய்ய இந்திய அரசு உதவி வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 இலங்கை பொருளாதார நெருக்கடி!

இலங்கை பொருளாதார நெருக்கடி!

2022 ஆம் ஆண்டு இலங்கை அரசு மோசமான அந்நியச் செலாவணி கையிருப்புக் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி, நாட்டில் அரசியல் கொந்தளிப்புகளாலும் மோசமாக பாதிக்கப்பட்டது.

 இலங்கை பொருளாதார நெருக்கடி

இலங்கை பொருளாதார நெருக்கடி

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு திவாலானதைத் தொடர்ந்து, மக்களின் பெரும் போராட்டத்தை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். அதைத் தொடர்ந்து அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார்.

 சர்வதேச நாணய நிதியம் உதவி

சர்வதேச நாணய நிதியம் உதவி

சமீபத்தில் நாட்டின் நிதி நிலைமையை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறுவதுதான் ஒரே வழி எனவும் அதிபர் ரணில் அவர்கள் கூறினார். இதுவரை சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை அரசு அதன் கடனாளியிடம் வாங்கிய கடன் தொகையை அடைக்க 4 ஆண்டுகளில் 2.9 பில்லியன் டாலர் கடன் தொகையாக கொடுத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+