இதென்னடா நகர்புறத்திற்கு வந்த சோதனை.. முதல் காலாண்டில் இவ்வளவு வீழ்ச்சியா..!

இந்தியாவின் நகர்புறங்களில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலங்களில் வேலையின்மை விகிதம் 9.3% குறைந்துள்ளதாக அரசு மதிப்பீடு செய்யப்பட்ட வெளியிடப்படாத அறிக்கையை ராய்ட்டர்ஸ் மதிப்பாய்வு செய்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது கடந்த நான்கு காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும்.

புள்ளி விவர அமைச்சகம், பதிவு செய்யப்பட்ட காலாண்டு வேலைவாய்ப்பு குறித்தான அறிக்கையில், பொருளாதார வளர்ச்சி மிக சரிவடைந்து வருகிறது.

வேலையின்மை குறைந்து வருகிறது

வேலையின்மை குறைந்து வருகிறது

இதனால் வேலை வாய்ப்புகள் மிக குறைந்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் மத்திய அரசு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என்ற சர்ச்சையும் கிளம்பியது. ஆனால் நடப்பு காலாண்டுகளில் ஓரளவுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வேலை விகிதம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜனவரி - முதல் மார்ச் வரையிலான காலாண்டுகளில் நகர்புற வேலையின்மை விகிதம், முந்தைய காலாண்டில் 9.9% ஆக இருந்தது.

கிராமப்புறங்கள் குறித்த எந்த விகிதமும் இல்லை

கிராமப்புறங்கள் குறித்த எந்த விகிதமும் இல்லை

இதே கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான வேலையின்மை விகிதம் எதுவும் இல்லை. இந்த நிலையில் ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டில் வேலையின்மை விகிதம் அப்போதிலிருந்து மிகக் குறைவாக இருக்கும். விரைவில் வெளிடக்கூடிய இந்த அறிக்கையில், கிராமப்புறங்களில் இருக்கும் வேலையின்மை, வேலை வாய்ப்பு விகிதம் பற்றிய அறிக்கைகள் இதில் எதுவும் இடம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இளைஞர்கள் அதிகம்

இளைஞர்கள் அதிகம்

இந்தியாவில் இளைஞர்களிடம் வேலையின்மை விகிதம் 15 - 29 வயதிற்குட்பட்டோர்கள், மொத்த வேலையின்மை விகிதங்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் விரிவான வேலை குறித்தான தரவுகளை வெளிடாததற்காக பொதுமக்களின் கோபத்தை, இந்திய அரசாங்கம் பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரிப்பு

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரிப்பு

கடந்த 2017ல் பிசினஸ் ஸ்டேண்டர்டு பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஜூலை 2017 - ஜூன் 2018 வரையிலான வேலை குறித்தான விரிவான அறிக்கையில் 45 ஆண்டுகளில் இல்லாதளவுக்கும் வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையிலேயே கடந்த ஜனவரி - மார்ச் வரையிலான காலத்தில், நான்கு ஆண்டுகளுக்கு குறைவான 5.8 சதவிகிதமாக சரிந்தது. இது அடுத்த காலாண்டில் மேலும் 5 சதவிகிதமாக குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விகிதம் அதிகரிக்கலாம்

வேலைவாய்ப்பு விகிதம் அதிகரிக்கலாம்

எப்படியோ இனி வரும் காலாண்டுகளிலாவது வேலையின்மை குறைந்து, வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம். ஏனெனில் அரசு எடுத்து வரும் தீவிர முயற்சியினால் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு, வேலைவாய்ப்பும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+