உலகையே பயத்தில் மூழ்கடித்திருக்கும் சீனாவின் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்களைத் தாக்கத் துவங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சில தரப்பினர் கோமியத்தைக் குடித்தும், போராட்டம் நடத்தியும் கொரோனா-வை துரத்த முயற்சி செய்கின்றனர்.
கொரோனாவின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் எனப் பல மாநிலங்கள் பள்ளிகள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை முடியுள்ளனர். மேலும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், வீட்டிலேயே இருக்கவும் தேவையான அனைத்து பொருட்களை வாங்கிக் குவித்து வருகின்றனர். சொல்லப்போனால் யாரும் வெளியேறச் செல்ல விரும்பவில்லை.
இந்நிலையில் கொரோனா தாக்குதலாலும், அதன் பின் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தாலும் இந்தியாவில் பல வர்த்தகத் துறைகள் பாதிப்படைந்துள்ளது.
அப்படி எந்தெந்த துறைகள் பாதிப்படைந்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.
முக்கியத் துறைகள்
பொதுவாக அதிக மக்கள் சக்தி தேவைப்படும் துறைகள் அதாவது உற்பத்தி, சேவை பிரிவில் இருக்கும் நிறுவனங்களில் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தையும் தாண்டி கொரோனாவால் கட்டுமான துறை, போக்குவரத்துத் துறை, கெமிக்கல் உற்பத்தி துறை ஆகியவை கடுமையாகப் பாதித்துள்ளது.
கொரோனா பாதிப்பு விமானங்கள், பஸ் மூலம் பயணம் செய்யும் போது அதிகளவில் பரவும் காரணத்தால் தற்போது மக்கள் பயணம் செய்வது என்றாலே பயத்தோடு இருப்பதால் இத்துறை பெரிய அளவில் பாதித்துள்ளது.
இறக்குமதி
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெய், ரத்தினம் மற்றும் தங்க, வைர நகைகள் மட்டும் சுமார் 46 சதவீதம் பங்கு வகிக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றத்தால் கச்சா எண்ணெய் இறக்குமதி இந்தியாவில் கணிசமாகக் குறைந்துள்ளது.
இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நம்பி வர்த்தகம் செய்யும் அனைத்து துறையும் பாதிப்பு அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை
வைரஸ் தாக்கம் வெளிச்சத்திற்கு வந்த நாள் முதலே உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்குச்சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. இது மோசமான பொருளாதார வளர்ச்சியிலும், மோசமான முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் இந்தியாவை அதிகளவில் பாதித்தது குறிப்பிடத்தக்கது.
இரும்பு மற்றும் ஸ்டீல்
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் தனது இரும்பு மற்றும் ஸ்டீல் தேவையைச் சீன இறக்குமதியில் இருந்து பூர்த்திச் செய்கிறது. இந்த அளவீடு குறைவாக இருக்கும் காரணத்தால் இத்துறையில் பெரிய அளவிலான பாதிப்பு ஏதுமில்லை என்றாலும் இறக்குமதி அளவில் கணிசமான பாதிப்பு இருக்கும்.
இதர பொருட்கள்
இதனைத் தாண்டி மின் இயந்திரங்கள், மெஷின் மற்றும் மெக்கானிக்கல் இயந்திரங்கள், ஆர்கானிக் கெமிக்கல்ஸ், பிளாஸ்ட் மற்றும் கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை இயந்திரங்கள் சார்ந்த துறைகள் அதிகளவில் பாதிக்கப்படும். இப்பிரிவு வர்த்தகத்தில் சுமார் 28 சதவீதம் இந்தியா சீன பொருட்களை நம்பியிருப்பதால் இத்துறைகள் பாதிக்கப்படும்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications