ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக கருதப்பட்டு ஆப்பிள் ஐபோன் தற்போது அனைவரின் கைகளிலும் வந்துள்ளது. இது விலை குறைக்கப்பட்டதால் இல்லை, ஐபோன்-க்கான கடனும், சந்தையில் கிடைக்கும் தன்மை ஆகியவற்றால் மட்டுமே ஆப்பிள் ஐபோன் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இந்த மாற்றம் இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த சாம்சங் நிறுவனத்திற்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 2024-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) ஆப்பிள் நிறுவனம் சந்தை பங்கீடு கணிசமாக வளர்ச்சி அடைந்துள்ளது மூலம் சாம்சங் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஆப்பிளின் சந்தைப் பங்கீடு கடந்த ஆண்டின் செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 58.5% அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் சாம்சங்கின் சந்தைப் பங்கீடு 19.7% குறைந்துள்ளது, இதுதான் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
இதன் மூலம் மூன்றாவது காலாண்டின் முடிவில் ஆப்பிளின் மொத்த சந்தைப் பங்கீடு 8.6% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 5.7% ஆக இருந்தது. சாம்சங்கின் மொத்த சந்தைப் பங்கீடு 16.2%ல் இருந்து 12.3% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஆப்பிளின் iPhone 15 மற்றும் iPhone 13 போன்ற சமீபத்திய ஐபோன் மாடல்களுக்கான அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. இந்த செப்டம்பர் காலாண்டில் மட்டும், ஆப்பிள் 40 லட்சம் போன்களை இந்திய சந்தையில் விற்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆன்லைன் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் இரண்டாவது இடத்தில் உள்ளது.
செப்டம்பர் காலாண்டில் ஆப்பிள் மட்டும் தான் வளர்ச்சி அடைந்துள்ளதா என்றால் நிச்சயமில்லை. செப்டம்பர் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை ஒட்டுமொத்தமாக 6% வளர்ச்சியடைந்து, சுமார் 4.6 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஆன்லைன் மூலம் செய்யப்படும் விற்பனை 8% வளர்ந்துள்ளது, இதேபோல் மொத்த விற்பனையில் சுமார் 51 சதவீதம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது. அதாவது கடைகளுக்குச் சென்று ஸ்மார்ட்போன் வாங்கும் மக்கள் எண்ணிக்கை குறைந்து, ஆதிக்க நிலை மாறியுள்ளதாகத் தெரிகிறது.
ஆப்பிள் மற்றும் சாம்சங் போட்டிக்கு மத்தியில் இந்தியா ஸ்மார்ட்போன் விற்பனையில் மோட்டோரோலா 149.5% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆனால் அதன் சந்தைப் பங்கீடு என பார்த்தால் வெறும் 5.7% மட்டுமே.
மறுபுறம், இந்தியாவில் ஒரு காலத்தில் கலக்கிக்கொண்டு இருந்த OnePlus செப்டம்பர் காலாண்டில் 39.3% வீழ்ச்சியடைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. இதேவேளையில் சீன பிராண்டான வீவோ தற்போது 15.8% சந்தைப் பங்கீட்டை கொண்டு மாஸ் காட்டி வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications