ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை ஐடி ஊழியர்களுக்கு சாதகமாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அது பாதகமாகவே அமைந்திருக்கிறது. பல்வேறு நிறுவனங்களும் லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஏஐ தொழில்நுட்பத்தை தங்களுடைய பணிகளில் அதிகமாக ஒருங்கிணைத்து மனிதர்களை வேலையில் இருந்து நீக்கிய வண்ணம் இருக்கின்றன.
இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டிலேயே டிசிஎஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கின. ஐடி துறையும் மந்தமாகவே இருந்தது. இதன் காரணமாக ஐடி துறை என்றாலே பணி பாதுகாப்பு இல்லாத ஒரு துறை என்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இந்தியாவை சேர்ந்த ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் ரஷ்யாவில் தூய்மை பணியாளராக வேலை செய்வதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

முகேஷ் மண்டல், 26 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் இந்தியாவை சேர்ந்தவர் . தற்போது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் உள்ள தெருக்களை சுத்தம் செய்து வருகிறார். இந்த வேலைக்கு அவருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. ரஷ்யாவில் வெளிவரக்கூடிய செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
ரஷ்யாவில் தற்போது பெரிய அளவிலான ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதற்காக இந்தியாவிலிருந்து ஊழியர்களை ரஷ்யா வேலைக்கு எடுத்து வருகிறது. அப்படி இந்தியாவில் இருந்து வேலைக்கு எடுக்கப்பட்ட 26 வயது இளைஞர்தான் முகேஷ் மண்டல். இவர் சாலைகளை பராமரிக்க கூடிய ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக குறிப்பிட்ட தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்வது இவருடைய பொறுப்பு . இதற்கு முன்பு இந்தியாவில் இருந்த அவர் சாப்ட்வேர் டெவலப்பராக வேலை செய்து இருக்கிறார். மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களில் தான் வேலை செய்ததாகவும் ஜிபிடி, ஏஐ, சாட் பாட் போன்றவற்றில் தனக்கு அனுபவம் இருக்கிறது என்றும் தான் ஒரு டெவலப்பர் என்றும் அவர் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இவருக்கு ரஷ்யாவில் 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை, தங்கும் இடம் , உணவு, வேலையில் இருக்கும் போது அணிய வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள், தினமும் போக்குவரத்துக்கான வசதி உள்ளிட்டு அனைத்தையும் ஏற்படுத்தி தந்திருக்கிறதாம். இவருடன் பல்வேறு தொழில் நிபுணர்களும் ரஷ்யாவில் இப்படி தூய்மை பணியில் இருக்கிறார்களாம்.
விவசாயிகள், ஓட்டுநர்கள், சிறு வணிக உரிமையாளர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்தியாவில் நிபுணர்களாக இருந்தவர்கள் தற்போது ரஷ்யாவில் இந்த வேலைகளை செய்து வருகிறார்கள். எந்த வேலை செய்கிறோம் என்பது பொருட்டே அல்ல அதனை சரியாக செய்கிறோமா என்பது தான் விஷயம் என கூறியுள்ளார் முகேஷ்.
சிறிது காலம் ரஷ்யாவில் தங்கி இருந்து பணத்தை சேமித்துவிட்டு பின்னர் தாயகம் திரும்ப இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இந்தியாவில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தவர் இப்படி ஒரு வேலைக்காக ரஷ்யாவிற்கு சென்று இருப்பது பெரிய விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications