இந்தியாவின் ஆகச் சிறந்த பெரிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளை ஒன்றன் பின் ஒன்றாக பட்டியலிடுங்கள்.
இப்போது அந்த ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் யார் எல்லாம் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். கணிசமான கம்பெனிகளில் சீனாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் அல்லது சீன நிறுவனங்கள் முதலீடு செய்து இருப்பார்கள்.
உதாரணம்: பேடிஎம், ஓலா, ஸ்விக்கி, பைஜூ என பல இந்திய ஸ்டார்ட் அப் கம்பெனிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இருவருக்குமே தேவை விஷயங்கள்
ஆக, இந்தியாவின் ஸ்டார்ட் அப் கம்பெனிகளில், சீனர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள். சீனர்களுக்கு லாபம் ஈட்டிக் கொடுக்கும் ஸ்டார்ட் அப் கம்பெனி தேவை. கம்பெனிகளுக்கு சீனர்களின் முதலீடு தேவையாக இருந்து இருக்கிறது. இப்போதும் இருக்கிறது. இனி இந்தியாவின் எந்த ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனியும் சீனாவிடம் இருந்து ஃபண்டிங் பெறுவது சிரமம் தான். காரணம் இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை.
ஏன் சிரமம்
சில மாதங்களுக்கு முன்பே, சீனா போன்ற நாடுகளில் (இந்தியா உடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகளில்) இருந்து, இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் எனச் சொன்னது இந்தியா. அங்கேயே சீனாவை கட்டம் கட்டுவது சீன முதலீட்டாளர்களுக்கு தெரிந்து இருக்கும்.
சீனா புறக்கணிப்பு
இப்போது இந்தியா சீன எல்லை பிரச்சனையில், சீன பொருட்கள் புறக்கணிப்பு வேறு பயங்கரமாக போய்க் கொண்டு இருக்கிறது. இதற்கு பயந்து ஒப்போ தன் Find X2 ஸ்மார்ட்ஃபோனின் லைவ் நிகழ்ச்சியைக் கூட நிறுத்திவிட்டார்கள். இதை எல்லாம் பார்த்த பின் இந்தியாவில் இந்திய ஸ்டார்ட் அப் கம்பெனியில் தைரியமாக முதலீடு செய்வார்களா என்ன? செய்யமாட்டார்கள் தானே. அது தான் இப்போதை பிரச்சனை. சரி இதுவரை எவ்வளவு முதலீடு செய்து இருக்கிறார்கள்?
சீன முதலீடு
கடந்த 2018-ம் ஆண்டு 2 பில்லியன் டாலரை முதலீடு செய்த சீன கம்பெனிகள், அடுத்த 2019-ம் ஆண்டில் 3.9 பில்லியன் டாலரை முதலிடு செய்து இருக்கிறது என எகமானிக் டைம்ஸ் தன் செய்தியில் குறிப்பிட்டு இருக்கிறது. அமெரிக்கா, இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடுகளை விட இது அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
முதலீடு
"சீனாவில் இருந்து ஒரு முதலீடு வருகிறது என்றால், எப்போதும் சில விதிகளோடு தான் வரும். தரமான கம்பெனிகளில் ஓரளவுக்கு மேல் சீனாவின் முதலீட்டைப் பெற மாட்டார்கள். அதே போல ஸ்டார்ட் அப் நிறுவனர்களும், தங்களின் 15 - 20 சதவிகித பங்குகளுக்கு மேல் சீனாவிடம் இருந்து முதலீடுகளைப் பெறதில்லை" எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஸ்டார்ட் அப் துறை சார்ந்த ஒருவர் சொல்லி இருக்கிறார். சரி சீனா முதலீடு செய்யவில்லை என்றால் யாருக்கு நஷ்டம்?
யாருக்கு பிரச்சனை
ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி இருப்பவர்கள் மற்றும் தொடக்க கால வளர்ச்சியில் இருப்பவர்களுக்கு ஃபண்டிங் கிடைப்பது தான் தற்போது அதிகம் பிரச்சனையாக இருக்கும். ஓரளவுக்கு வளர்ந்த ஸ்டார்ட் அப் கம்பெனிகள் கூட ஃபண்டிங் பிரச்சனையை சமாளித்து கொள்ளலாம் என ஒரு சில ஸ்டார்ட் அப் துறை சார்ந்தவர்கள் சொல்கிறார்களாம்.
வாய்ப்புகள்
சமீபத்தில் மத்திய அரசு, இந்தியா உடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாட்டில் இருந்து முதலீடுகள் வந்தால், அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் எனச் சொன்னது. அப்போதே சீனாவில் இருந்து முதலீடுகள் வருவது குறைந்துவிட்டது. ஆனால் இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் இருக்கிறார்கள் என்கிறார் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனர்.
முதலீடுகள் குறையும்
ஆக எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும், சீனாவில் இருந்து, இந்தியாவின் ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் பணம் முதலீடு செய்வது மேலும் குறையலாம். எனவே இப்போதில் இருந்தே ஸ்டார்ட் அப் கம்பெனிகள் வேறு முதலீட்டாளர்களைத் தேடிக் கொள்வது நல்லது. இன்னும் இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை எதில் எல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications