இன்றைய வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றால் மிகையில்லை. உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை அளித்து வரும் ஐடி துறை இந்த ஆண்டு மந்தமான வர்த்தகச் சூழ்நிலையில், செலவுகளைக் குறைக்கவும், லாப அளவீட்டை உயர்த்திக் காட்டவும் பிரஷ்ஷர்களை சேர்ப்பதை நிறுத்தியுள்ளது அல்லது பெரிய அளவில் குறைத்துள்ளது.
இப்படி ஒட்டுமொத்த டெக், ஐடி, டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் பல காரணங்களால் மோசமான நிலையில் முடக்கப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டில் நியூ ஏஜ் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் திவாலாகி விடக்கூடாது என்பதற்காக ஊழியர்களைக் கண்ணை மூடிக்கொண்டு பணி நீக்கம் செய்தது.

2023 ஆம் ஆண்டின் முதல் 3 காலாண்டில் மட்டும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருந்து சுமார் 28000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. 2023 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் அமெரிக்காவில் வங்கிகள் திவாலானதில் இருந்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான முதலீடுகள் மொத்தமாகக் கட்டானது.
இதனால் இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்து தங்களுடைய நிறுவனத்தைத் திவால் ஆகாமல் காப்பாற்றிக்கொள்ள கடுமையான மறுசீரமைப்பு நடவடிக்கையை எடுத்தனர். இதுமட்டும் அல்லாமல் அடுத்த 2 வருடத்திற்கு நிறுவனமும், சேவைகளும் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்க தேவையான ஊழியர்களை மட்டுமே வைத்துக்கொண்டு இயங்க முடிவு செய்தது.
இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த மோசமான பணிநீக்கத்திற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு, 2021 ஆம் ஆண்டில் அளவுக்கு அதிகமான ஊழியர்களைப் பணியில் சேர்த்தது. இதனால் 2021ல் 4080 ஊழியர்களும், 2022ல் 20000 ஊழியர்களும், 2023ல் 28000 ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் உடான், பிசிக்ஸ்வாலா, பிசாங்கோ, Third Wave Coffee போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் எட்டெக், ரியல் மனி கேம், B2B பிரிவில் இருக்கும் நிறுவனத்தில் அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதில் அதிகப்படியாகப் பைஜூஸ் நிறுவனம் அக்டோபர் வரையிலான காலத்தில் சுமார் 2500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. அமேசான் 1500 பேரையும், ரிலையன்ஸ் B2B 1000 பேரையும் பணிநீக்கம் செய்துள்ளது. இப்படிச் சிறிதும், பெரிதுமாகப் பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து ஜாப் இன்செக்யூரிட்டியை கொடுத்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications