உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் ஏஐ மற்றும் கிளவுட் சேவை விரிவாக்குவதில் தீவிரமாக இருக்கும் காரணத்தால் மற்ற அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த ஏஐ ரயிலில் யார் முதலில் ஏறுகிறார்களோ அவர்கள் தான் தொடர்ந்து வர்த்தக சந்தையில் நிலைத்திருக்க முடியும் என்பது தீவிரமாக நம்பப்படுகிறது.
இதனால் சிறிய மற்றும் பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்தும் மொத்த வர்த்தகத்திலும், செயல்பாட்டிலும் செலவுகளை குறைத்து ஏஐ பிரிவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளனர். இதன் வாயிலாகவே தற்போது டெக் துறையில் கூகுள், மைக்ரோசாப்ட் முதல் டிசிஎஸ், இன்போசிஸ் வரையில் டெக் மற்றும் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

தொடரும் பணிநீக்கத்தால் ஒட்டுமொத்த டெக் துறையும் கலக்கத்தில் இருக்கும் வேளையில், பணிநீக்கம் செய்யப்படும் இந்திய டெக் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு புதிய கதவுகள் திறந்துள்ளது.
ஆம், இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் இந்த வருடம் அதிகப்படியான ஊழியர்களை பணியில் சேர்க்க உள்ளதாக தெரிகிறது. டிசிஎஸ் மட்டுமே 12000க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ள இந்த வேலையில், ஸ்டார்ட்அப் துறையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் இருந்து வரும் முதலீடுகளும், சந்தை வர்த்தகமும் அதிகப்படியான ஏற்ற இறக்கங்கள் இருக்கும் இத்தகைய சூழ்நிலையிலும் இந்தியாவின் ஸ்டார்ட்அப் துறை வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் முடிவில் உள்ளது பாராட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது.
2025-2026ஆம் நிதியாண்டில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சுமார் 1.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், இதன் மூலம் ஐடி சேவை துறையில் ஏற்படும் பணிநீக்கங்கள் ஈடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 2024ஆம் ஆண்டில் 1.4 லட்சம் ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்த்த நிலையில் இந்த ஆண்டு 1.7 லட்சம் பேரை சேர்க்க உள்ளது. அதாவது கிட்டத்தட்ட 30000 பேருக்கு கூடுதலாக இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
வேலைவாய்ப்பு சேவை நிறுவனமான Xpheno தரவுகளின் அடிப்படையில், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் வர்த்தக விரிவாக்கம், புதிய சேவை அறிமுகம், திறன் மேம்பாட்டு முயற்சிகளையும், புதிய தொழில்நுட்ப தேவைகள் உருவாகியிருக்கும் காரணத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய ஸ்டார்ட்அப்களில் சுமார் 16,000 வேலைவாய்ப்புகள் (Job Openings) இருப்பதாக Xpheno தரவுகள் இருப்பதாகவும், இது மார்ச் மாத அளவீட்டை விடவும் 23 சதவீதம் அதிகமாகும்.
தற்போது இந்திய ஸ்டார்ட்அப் துறையில் டேட்டா சயின்ஸ், கிளவுட் இன்ஜினியரிங், ஃபுல்-ஸ்டாக் டெவலப்மென்ட், ஏஐ/எம்எல் இன்ஜினியரிங், புரோகிராம் மேனேஜ்மென்ட், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பிசினஸ் டெவலப்மென்ட் போன்ற பிரிவுகளில் தான் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த தேவைகள், ஸ்டார்ட்அப்களின் விரிவாக்கத்திற்கும், புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கும் முக்கியமானதாக உள்ளன.
மொபிக்விக், கேஷ்காரோ & ஈர்ன்காரோ, இன்மோபி மற்றும் டீல் போன்ற பிரபலமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு 60000 முதல் 80000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications