இந்திய டெக் நிறுவனங்களும், டெக் ஊழியர்களும் லாக்டவுன் காலத்தில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான சம்பள உயர்வு, அதிகப்படியான வேலைவாய்ப்புகள், மூன்லைட்டிங் வாய்ப்புகள் என ஒன்று 3 - 4 சம்பளம் பெற்று இருந்தனர். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் முதலீட்டு சந்தை வறண்டு போன காரணத்தால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்தியாவின் முன்னணி எட்டெக் நிறுவனமான பைஜூஸ் இந்த வாரம் 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் மறுசீரமைப்பு நடவடிக்கையும் சேர்த்து, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 30,000த்திற்கும் மேல் பணிநீக்கம் செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாட்டிக்கொண்டு உள்ளனர்.
2022 முதல் இன்று வரை, இந்தியாவில் ஏறக்குறைய 95 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 31,965 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக சந்தை தரவுகள் கூறுகிறது. இந்த பணிநீக்கத்தின் மூலம் பல நிறுவனங்கள் லாபத்தை கூட்டியும், வர்த்தகத்தை காப்பாற்றியும், பல நிறுவனங்கள் திவால் ஆகாமல் தப்பித்துள்ளது என்றால் மிகையில்லை.
ஆனால் பணிநீக்கத்தில் ஈடுப்பட்டு உள்ள 95 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பெரும்பாலானவை தேவைக்கும் அதிகமாக பணியாளர்களை பணியில் சேர்த்துள்ளது. இதனாலேயே அதிகப்படியான பணிநீக்கம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர், இது முற்றிலும் நிறுவனங்களின் தவறு என்றால் மிகையில்லை.

இந்த நிலையில் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் கடந்த சில மாதங்களில் பணிநீக்கங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் மீண்டும் வேலைவாய்ப்பு அளவுகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை எழுந்துள்ளது. ஆனால் 2023 ஆம் ஆண்டிலும் பணிநீக்கம் நடந்துள்ளது,
2023 ஆம் ஆண்டில் மட்டும், தோராயமாக 49 ஸ்டார்ட்அப்கள் கிட்டத்தட்ட 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த பணிநீக்கத்தை மிகவும் அமைதியான முறையில் நடத்தும் காரணத்தால், உண்மையான பணிநீக்கங்களின் எண்ணிக்கை வெளிவரவில்லை.
2022- 2023 ஆம் ஆண்டுகளில் அதிகளவில் பணிநீக்கத்தை எதிர்கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பது பைஜூஸ் தான். இந்த பணிநீக்கம் ஸ்டார்ட்அப் துறையில் குறையுமா உயருமா என்பது முதலீட்டு சந்தையின் வேகத்தை பொறுத்து அமையும்.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications