1,00,000 பேருக்கு வேலை.. பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..!

இந்திய ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் வரலாறு காணாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் ஊழியர்களின் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் அதிகப்படியான ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களுக்கு போட்டியாக தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஐடி முதல் அனைத்து பிரிவுகளிலும் அதிகளவிலான ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் தற்போது சந்தையில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை மலைக்கணக்காக குவிந்து வருகிறது.

 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

2020ஆம் ஆண்டில் இந்தியாவில் சிறிதும், பெரிதுமாக பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சீரியஸ் ஏ முதல் ஈ வரையிலான முதலீட்டை திரட்டி தற்போது முதலீடுகள் நிறுவனங்கள் கையில் வந்துக்கொண்டு இருக்கிறது. இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தனது வர்த்தக விரிவாக்கத்தை வேகப்படுத்தியுள்ளது.

  1,00,000 வொயிட் காலர் ஜாப்ஸ்

1,00,000 வொயிட் காலர் ஜாப்ஸ்

இதனால் இந்தியாவில் புதிதாக முதலீட்டை ஈர்த்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டும் இந்த வருடத்திற்குள் சுமார் 1,00,000 வொயிட் காலர் ஜாப்ஸ் உருவாக்க தயாராகியுள்ளது என வேலைவாய்ப்பு நிறுவனமான Xpheno தெரிவித்துள்ளது.

  8 மாத நிலவரம்

8 மாத நிலவரம்

Xpheno சுமார் 243 முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் செய்த ஆய்வின் படி 2021ஆம் ஆண்டில் முதல் 8 மாதத்தில் மட்டும் சுமார் 55,000 பேரை புதிதாக பணியில் அமர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இதன் எண்ணிக்கை வெறும் 30,000 ஆக இருந்தது.

80 சதவீதம் அதிகரிப்பு

80 சதவீதம் அதிகரிப்பு

இதுமட்டும் அல்லாமல் கடந்த 20 மாதத்தில் அதாவது ஜனவரி 2020 முதல் இந்த 243 நிறுவனங்களின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது 2021ஆம் ஆண்டு முடிவிற்குள் 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என கணிக்கப்படுகிறது.

 ப்ளூ காலர் மற்றும் கிரே காலர்

ப்ளூ காலர் மற்றும் கிரே காலர்

தற்போது கணக்கிடப்பட்டுள்ள 1,00,000 வேலைவாய்ப்புகள் அனைத்தும் வொயிட் காலர் ஜாப்ஸ் அதாவது ப்ரொபஷனல் வேலைவாய்ப்புகள். இந்த 1 லட்சம் ப்ரொபஷனல் வேலைவாய்ப்புகள் மூலம் இந்தியா முழுவதும் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான ப்ளூ காலர் மற்றும் கிரே காலர் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் அதிகம். அதிலும் பண்டிகை காலம் நெருங்கியுள்ள நேரத்தில் எளிதாக இது சாத்தியப்படும் என கணக்கிடப்படுகிறது.

 மொத்த  முதலீட்டு அளவு

மொத்த முதலீட்டு அளவு

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீட்டு அளவுகள் புதிய உச்சத்தை அடைந்துள்ளது, சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த வருடத்தை விடவும் இரட்டிப்பு வளர்ச்சியை முதலீட்டில் பதிவாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு மட்டும் சுமார் 250 முதலீடுகள் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் குவிந்துள்ளது, இதன் மொத்த மதிப்பு மட்டும் 13.3 பில்லியன் டாலர்.

  டாப் 5 துறைகள்

டாப் 5 துறைகள்

மேலும் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் டாப் 5 துறைகள் இதுதான்.

1. எட்டெக் (கல்வி சேவை)
2. பின்டெர் (நிதியியல் சேவை துறை)
3. ஈகாமர்ஸ் (ஆன்லைன் ஷாப்பிங்)
4. லாஜிஸ்டிக்ஸ் (சரக்கு போக்குவரத்து)
5. வன்பொருள் & பிளாட்பார்ம் தொழில்நுட்ப துறை

 ஐடி சேவை துறை

ஐடி சேவை துறை

இதேபோல் ஐடி சேவை துறையிலும் அடுத்த சில வருடங்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் இருப்பது மட்டும் அல்லாமல் அதிகப்படியான சம்பளத்தை அளிக்க தயாராக உள்ளனர் என்பது தான் தற்போதை நிலை. இதனால் வேவைவாய்ப்பு சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது

ஐடி ஊழியர்களுக்கு இனி ராஜ வாழ்க்கை.. ஏகப்பட்ட சம்பளம்..!
https://tamil.goodreturns.in/news/it-job-market-and-massive-salary-hike-will-remain-for-1-2-years-red-hot-025029.html

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+